• Oct 18 2024

தாயும் மகளும் நகைக்காக கொல்லப்பட்டனரா? - குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிரடி நடவடிக்கை samugammedia

Chithra / Jul 25th 2023, 4:18 pm
image

Advertisement

அங்குருவத்தோட்ட பகுதியில் தாய் மற்றும் அவரது சிறிய மகளை படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர், குறித்த பெண் அணிந்திருந்த தங்க நகையை அடகு வைத்துள்ளாரா என்பதை அறிய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர்.

சந்தேக நபர் கடந்த 21ஆம் திகதி ஹொரணையில் உள்ள அடகுக்கடை ஒன்றிற்கு வந்து தங்க நகையை அடகு வைத்து 48000 ரூபா பணத்தை பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேக நபரின் அடையாள அட்டை இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இது தெரியவந்துள்ளது.

மேலும் இதுதொடர்பான விசாரணைக்காக, அடகு வைத்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

படுகொலை செய்யப்பட்ட தாயும் அவரது சிறிய மகளும் கடந்த 18ஆம் திகதி அவர்களது வீட்டிலிருந்து காணாமல் போயிருந்த நிலையில், மூன்று நாட்களுக்குப் பின்னர் 21ஆம் திகதி அவர்களின் சடலங்கள் சுமார் 700 மீற்றர் தொலைவிலுள்ள இரத்மல்கொட காட்டுப்பகுதியில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தாயும் மகளும் நகைக்காக கொல்லப்பட்டனரா - குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிரடி நடவடிக்கை samugammedia அங்குருவத்தோட்ட பகுதியில் தாய் மற்றும் அவரது சிறிய மகளை படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர், குறித்த பெண் அணிந்திருந்த தங்க நகையை அடகு வைத்துள்ளாரா என்பதை அறிய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர்.சந்தேக நபர் கடந்த 21ஆம் திகதி ஹொரணையில் உள்ள அடகுக்கடை ஒன்றிற்கு வந்து தங்க நகையை அடகு வைத்து 48000 ரூபா பணத்தை பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.சந்தேக நபரின் அடையாள அட்டை இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இது தெரியவந்துள்ளது.மேலும் இதுதொடர்பான விசாரணைக்காக, அடகு வைத்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.படுகொலை செய்யப்பட்ட தாயும் அவரது சிறிய மகளும் கடந்த 18ஆம் திகதி அவர்களது வீட்டிலிருந்து காணாமல் போயிருந்த நிலையில், மூன்று நாட்களுக்குப் பின்னர் 21ஆம் திகதி அவர்களின் சடலங்கள் சுமார் 700 மீற்றர் தொலைவிலுள்ள இரத்மல்கொட காட்டுப்பகுதியில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement