கொழும்பு மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படுவதற்கான காரணம் தொடர்பில் ஆராய்ந்து முதற்கட்ட அறிக்கையை இரண்டு வாரங்களில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலைக் காரணமாக கொழும்பில் வெள்ளம் ஏற்பட்டமை தொடர்பில், ஆராய்வதற்காக நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சகல ரத்நாயக்க, கொழும்பு மாவட்டத்தில் உள்ள சகல பிரதேச செயலாளர்களுக்கும் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
கொழும்பு மாவட்டத்தின் சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில், இந்த அறிக்கையை தயாரிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கொழும்பில் வெள்ளம் ஏற்படக் காரணம் என்ன - இரு வாரங்களில் அறிக்கையிட அறிவுறுத்தல் கொழும்பு மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படுவதற்கான காரணம் தொடர்பில் ஆராய்ந்து முதற்கட்ட அறிக்கையை இரண்டு வாரங்களில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலைக் காரணமாக கொழும்பில் வெள்ளம் ஏற்பட்டமை தொடர்பில், ஆராய்வதற்காக நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சகல ரத்நாயக்க, கொழும்பு மாவட்டத்தில் உள்ள சகல பிரதேச செயலாளர்களுக்கும் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.கொழும்பு மாவட்டத்தின் சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில், இந்த அறிக்கையை தயாரிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.