புலிகளை மட்டுமே அழித்து பயங்கரவாத யுத்தத்தை வெற்றிகொண்டேன் என மமதையுடன் முழங்கிய சரத் பொன்சாவுக்கு தமிழ் மக்களை வாக்களிக்க சொல்லி தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளியுலகுக்கு காட்டியதாக கூறிய தமிழ் தேசியம் பேசும் கட்சிகள் அதனூடாக தமிழ் மக்களின் நலனுக்காக இதுவரை சாதித்தது என்ன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (19.07.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கேளிவியெழுப்பியிருந்த அவர் மேலும் கூறுகையில்,
தமிழ் மக்கள் ஒற்றமையாக இருக்கின்றோம் என்பதை உலகுக்க காட்டுவதுதான எங்களது விருப்பம். அது தான் பொது வேட்பாளர் விடயம் என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் சில தினங்களுக்கு முன்னர் கூறியுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு 22 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த சமயம் அக்கட்சிகளின் தலைவர்களுக்குள் ஒற்றுமை எவ்வாறு இருந்தது? என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.
அச்சமயம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி தீவிரமான போலித்தேசியம் பேசியிருந்தனர். அதன்பின்னர் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த போது புளொட் அமைப்பும் அதில் அங்கம் வகித்திருந்தது.
பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் 10 நாடாளுமன்ற உறுப்பினராகளாக குறைவடைந்த பின்னரும் அவர்களது ஒற்றுமையை சர்வதேசம் நன்கு அறிந்துவைத்திருக்கின்றது.
சமீபத்தில் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க உட்பட இந்தியத் தரப்பினரும் அதேபோன்று பல நாடுகளின் இராஜதந்திரிகளும் கூட்டமைப்பின் ஒற்றுமைபற்றி பல்வேறு கருத்தக்களை வெளியிட்டுவந்துள்ளனர்.
அமரர் சம்பந்தன் அவர்களது இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலிசெலுத்த வந்திருந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலையை சந்திக்கும்போது கூட போலித்தேசியம் பேசுகின்ற கட்சிகள் ஒற்றுமையை அதில் கூட காண்பித்திருக்கவில்லை. இதெல்லாம் அனைவரும் அறிந்த விடயம்.
இந்த சூழலில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் திணைக்களத்திற்கு முழுமையான அதிகாரம் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் பொதுவேட்பாளர் யார் என்பதைக் கூட தெரிவு செய்ய முடியாத நிலையில் ஒற்றுமையை காட்டுவதன் மூலம் நாம் உலக நாடகளிடையே எமது சரியான நிலைப்பாட்டை காட்டக்கூடியதாக இருக்கும் அதற்காகவே இந்த முயற்சி செய்கின்றோம் என ஏமாற்றுவது தமிழ் மக்களையே தவிர தென்னிலங்கையை அல்ல.
சரத் பொன்சேகவுக்கு வாக்களிக்க சொன்னவர்கள் பின்னர் மைத்திரிக்கு வாக்களிக்க சொன்னவர்கள் அதன்பின்னர் சஜித்துக்கு வாக்களிக்க சொன்னவர்கள் இவ்வாறு தொடர்ச்சியாக தமிழ் மக்களின் வாக்குகளை தமது நலன்களுக்காக பகடையாக்கி வருகின்றனர்.
முதலில் தூய்மையான ஒற்றுமையை, பொதுவான அரசியல் கொள்கையை, தமது பொது வேலைத்திட்டத்தை தைரியமாக மக்களிடத்தில் எடுத்துச் சொல்வார்களா? அவ்வாறான தன்மை அவர்களிடம் இருக்கின்றதா?
மக்களிடம் தத்தமது கொள்கைகளை எடுத்துச் செல்ல தென்பற்றவர்களே இவ்வாறு ஒற்றுமை, பொது வேட்பாளர் என்ற வெடங்களை அணிந்து செல்லவேண்டிய வெட்கக்கேடான நிலையில் உள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளியுலகுக்க காட்டியதாக கூறியவர்கள் அதனூடாக சாதித்தது என்ன – ஈ.பிடி.பியின் ஊடக பேச்சாளர் கேள்வி புலிகளை மட்டுமே அழித்து பயங்கரவாத யுத்தத்தை வெற்றிகொண்டேன் என மமதையுடன் முழங்கிய சரத் பொன்சாவுக்கு தமிழ் மக்களை வாக்களிக்க சொல்லி தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளியுலகுக்கு காட்டியதாக கூறிய தமிழ் தேசியம் பேசும் கட்சிகள் அதனூடாக தமிழ் மக்களின் நலனுக்காக இதுவரை சாதித்தது என்ன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (19.07.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கேளிவியெழுப்பியிருந்த அவர் மேலும் கூறுகையில்,தமிழ் மக்கள் ஒற்றமையாக இருக்கின்றோம் என்பதை உலகுக்க காட்டுவதுதான எங்களது விருப்பம். அது தான் பொது வேட்பாளர் விடயம் என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் சில தினங்களுக்கு முன்னர் கூறியுள்ளார்.தமிழ் தேசிய கூட்டமைப்பு 22 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த சமயம் அக்கட்சிகளின் தலைவர்களுக்குள் ஒற்றுமை எவ்வாறு இருந்தது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். அச்சமயம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி தீவிரமான போலித்தேசியம் பேசியிருந்தனர். அதன்பின்னர் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த போது புளொட் அமைப்பும் அதில் அங்கம் வகித்திருந்தது.பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் 10 நாடாளுமன்ற உறுப்பினராகளாக குறைவடைந்த பின்னரும் அவர்களது ஒற்றுமையை சர்வதேசம் நன்கு அறிந்துவைத்திருக்கின்றது.சமீபத்தில் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க உட்பட இந்தியத் தரப்பினரும் அதேபோன்று பல நாடுகளின் இராஜதந்திரிகளும் கூட்டமைப்பின் ஒற்றுமைபற்றி பல்வேறு கருத்தக்களை வெளியிட்டுவந்துள்ளனர்.அமரர் சம்பந்தன் அவர்களது இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலிசெலுத்த வந்திருந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலையை சந்திக்கும்போது கூட போலித்தேசியம் பேசுகின்ற கட்சிகள் ஒற்றுமையை அதில் கூட காண்பித்திருக்கவில்லை. இதெல்லாம் அனைவரும் அறிந்த விடயம். இந்த சூழலில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் திணைக்களத்திற்கு முழுமையான அதிகாரம் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் பொதுவேட்பாளர் யார் என்பதைக் கூட தெரிவு செய்ய முடியாத நிலையில் ஒற்றுமையை காட்டுவதன் மூலம் நாம் உலக நாடகளிடையே எமது சரியான நிலைப்பாட்டை காட்டக்கூடியதாக இருக்கும் அதற்காகவே இந்த முயற்சி செய்கின்றோம் என ஏமாற்றுவது தமிழ் மக்களையே தவிர தென்னிலங்கையை அல்ல.சரத் பொன்சேகவுக்கு வாக்களிக்க சொன்னவர்கள் பின்னர் மைத்திரிக்கு வாக்களிக்க சொன்னவர்கள் அதன்பின்னர் சஜித்துக்கு வாக்களிக்க சொன்னவர்கள் இவ்வாறு தொடர்ச்சியாக தமிழ் மக்களின் வாக்குகளை தமது நலன்களுக்காக பகடையாக்கி வருகின்றனர்.முதலில் தூய்மையான ஒற்றுமையை, பொதுவான அரசியல் கொள்கையை, தமது பொது வேலைத்திட்டத்தை தைரியமாக மக்களிடத்தில் எடுத்துச் சொல்வார்களா அவ்வாறான தன்மை அவர்களிடம் இருக்கின்றதா மக்களிடம் தத்தமது கொள்கைகளை எடுத்துச் செல்ல தென்பற்றவர்களே இவ்வாறு ஒற்றுமை, பொது வேட்பாளர் என்ற வெடங்களை அணிந்து செல்லவேண்டிய வெட்கக்கேடான நிலையில் உள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.