• Dec 14 2024

சேற்று நீர் நிரம்பிய குழியில் அமர்ந்து போராட்டம் நடத்திய பெண்- காரணம் என்ன?

Tamil nila / May 24th 2024, 7:53 pm
image

பெண் ஒருவர், தான் வசிக்கும் பகுதியிலுள்ள வீதியின் மோசமான நிலையை எடுத்துக்காட்டும் வகையில் முன்னெடுத்த போராட்டம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

ஹைதராபாத் மாநிலம் நாகோல் பகுதியில் உள்ள ஆனந்த்நகர் குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவரே இவ்வாறு போராட்டம் நடத்தியுள்ளார்.

குறித்த பெண், தான் வசிக்கும் பகுதியிலுள்ள சேற்று நீர் நிரம்பிய குழியில் அமர்ந்து போராட்டம் நடத்தியுள்ளார்.

குறித்த வீதியில், உள்ள குன்று, குழிகளால் மக்கள் அன்றாடம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதாகவும் இதனை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லவே இவ்வாறான போராட்டத்தில் ஈடுபட்டதாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் குறித்த பெண்ணின் கோரிக்கையை ஏற்று, அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக உறுதியளித்துள்ளனர்.

சேற்று நீர் நிரம்பிய குழியில் அமர்ந்து போராட்டம் நடத்திய பெண்- காரணம் என்ன பெண் ஒருவர், தான் வசிக்கும் பகுதியிலுள்ள வீதியின் மோசமான நிலையை எடுத்துக்காட்டும் வகையில் முன்னெடுத்த போராட்டம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.ஹைதராபாத் மாநிலம் நாகோல் பகுதியில் உள்ள ஆனந்த்நகர் குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவரே இவ்வாறு போராட்டம் நடத்தியுள்ளார்.குறித்த பெண், தான் வசிக்கும் பகுதியிலுள்ள சேற்று நீர் நிரம்பிய குழியில் அமர்ந்து போராட்டம் நடத்தியுள்ளார்.குறித்த வீதியில், உள்ள குன்று, குழிகளால் மக்கள் அன்றாடம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதாகவும் இதனை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லவே இவ்வாறான போராட்டத்தில் ஈடுபட்டதாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.மேலும் சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் குறித்த பெண்ணின் கோரிக்கையை ஏற்று, அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக உறுதியளித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement