• Jul 27 2024

ஆபத்தான மரங்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்த அதிரடி தீர்மானம்

Tamil nila / May 24th 2024, 8:04 pm
image

Advertisement

நாட்டில் ஏற்பட்டுள்ள மழை மற்றும் கடும் காற்றுடனான வானிலையினால் மரங்கள் முறிந்து விழும் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், அதனை தடுக்கும் வகையிலான தேசிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவிக்கின்றார்.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கலந்துரையாடல் பாதுகாப்பு அமைச்சில் இன்று  இடம்பெற்றது.

நாட்டில் கடந்த 19ஆம் திகதி முதல் இன்று  வரை மரங்கள் முறிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 11பேர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன், 18 மாவட்டங்களில் 9688 குடும்பங்களைச் சேர்ந்த 35,796 பேர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

மரங்கள் முறிந்து வீழ்வதனால் ஏற்படும் அனர்த்தங்கள் தொடர்பில் இன்றைய கலந்துரையாடலில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக மரங்கள் விழும் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அதனை தடுக்கும் நடவடிக்கையாக தேசிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், வீதிகளில் மரங்கள் அதிகமாக விழுவதால் அவற்றைக் கட்டுப்படுத்த வீதி அபிவிருத்தி அதிகார சபை, மாகாண அதிகார சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் ஆதரவையும் அமைச்சர் எதிர்பார்ப்பதாகவும் இதன்போது கூறியுள்ளார்.

வீதியோரம் மரங்களை நடுவது தொடர்பில் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய பின்னர் விசேட குழுவொன்றின் வழிகாட்டலின் கீழ் தேசியக் கொள்கையொன்றை உருவாக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், பாதுகாப்பற்ற மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்டிட நிர்மாணங்களால் தாழ்நிலப் பிரதேசங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டில் மழை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ள நிலையில், எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடிய அவசர நிலைமைகளுக்கு முகங்கொடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் தென்னகோன் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும் சீரற்ற காலநிலை தொடர்பான அவசரநிலைகளை எதிர்கொள்ள பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்

ஆபத்தான மரங்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்த அதிரடி தீர்மானம் நாட்டில் ஏற்பட்டுள்ள மழை மற்றும் கடும் காற்றுடனான வானிலையினால் மரங்கள் முறிந்து விழும் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், அதனை தடுக்கும் வகையிலான தேசிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவிக்கின்றார்.நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இந்த கலந்துரையாடல் பாதுகாப்பு அமைச்சில் இன்று  இடம்பெற்றது.நாட்டில் கடந்த 19ஆம் திகதி முதல் இன்று  வரை மரங்கள் முறிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 11பேர் காயமடைந்துள்ளனர்.அத்துடன், 18 மாவட்டங்களில் 9688 குடும்பங்களைச் சேர்ந்த 35,796 பேர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.மரங்கள் முறிந்து வீழ்வதனால் ஏற்படும் அனர்த்தங்கள் தொடர்பில் இன்றைய கலந்துரையாடலில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.அண்மைக்காலமாக மரங்கள் விழும் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அதனை தடுக்கும் நடவடிக்கையாக தேசிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.மேலும், வீதிகளில் மரங்கள் அதிகமாக விழுவதால் அவற்றைக் கட்டுப்படுத்த வீதி அபிவிருத்தி அதிகார சபை, மாகாண அதிகார சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் ஆதரவையும் அமைச்சர் எதிர்பார்ப்பதாகவும் இதன்போது கூறியுள்ளார்.வீதியோரம் மரங்களை நடுவது தொடர்பில் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய பின்னர் விசேட குழுவொன்றின் வழிகாட்டலின் கீழ் தேசியக் கொள்கையொன்றை உருவாக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும், பாதுகாப்பற்ற மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்டிட நிர்மாணங்களால் தாழ்நிலப் பிரதேசங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.நாட்டில் மழை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ள நிலையில், எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடிய அவசர நிலைமைகளுக்கு முகங்கொடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் தென்னகோன் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.மேலும் சீரற்ற காலநிலை தொடர்பான அவசரநிலைகளை எதிர்கொள்ள பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement