கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் கொண்டுவரத் தீர்மானித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை, இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆதரிக்காது என அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வரும் பட்சத்தில், அதற்கு எதிராக வாக்களிப்பதா அல்லது வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இருப்பதா என்பது குறித்து, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழு கூடி இறுதித் தீர்மானம் எடுக்கும் எனவும் குறிப்பிட்டார்.
கல்வித் துறை தொடர்பான சில நிர்வாக மற்றும் கொள்கை ரீதியான விடயங்களை முன்னிறுத்தியே, பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
எனினும், தற்போதைய அரசியல் சூழலில் இந்தப் பிரேரணை ஒரு கொள்கைச் சண்டையாக விட, அரசியல் அழுத்தத்தை உருவாக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், சிறுபான்மைக் கட்சிகள், குறிப்பாக வடக்கு -கிழக்கு மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ள கட்சிகள், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டையே எடுத்து வருகின்றன.
அந்தவகையில், தமிழரசுக் கட்சியின் தற்போதைய நிலைப்பாடு, ஆட்சி – எதிர்க்கட்சி அரசியல் மோதல்களிலிருந்து விலகி, தமது மக்களின் அரசியல் மற்றும் நிர்வாக கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அணுகுமுறையாகவே கருதப்படுகின்றது. என்று சிவஞானம் சிறீதரன் எம்.பி. தெரிவித்தார்.
இதேவேளை கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் தற்போது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளவே முடியாத அவதூறு பிரசாரங்களை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. தனது முகநூல் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-
"பிரதமர் என்கின்ற ரீதியிலும் அவரது கட்சியின் ஒரு முக்கியஸ்தர் என்ற வகையிலும் கல்வி அமைச்சர் என்கின்ற ரீதியிலும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடன் எமது அமைப்புக்கும் எனக்கும் மிக முக்கியமான தீர்க்கமான கொள்கை முரண்கள் இருக்கின்ற போதிலும்,
6ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பில் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளவே முடியாத அவதூறு பிரசாரங்களை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை." - என்றுள்ளது
பிரதமருக்கு எதிரான பிரேரணை தொடர்பில் தமிழ் கட்சிகளின் நிலைப்பாடு என்ன வெளியான அறிவிப்பு கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் கொண்டுவரத் தீர்மானித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை, இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆதரிக்காது என அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் எம்.பி. தெரிவித்தார்.இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வரும் பட்சத்தில், அதற்கு எதிராக வாக்களிப்பதா அல்லது வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இருப்பதா என்பது குறித்து, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழு கூடி இறுதித் தீர்மானம் எடுக்கும் எனவும் குறிப்பிட்டார்.கல்வித் துறை தொடர்பான சில நிர்வாக மற்றும் கொள்கை ரீதியான விடயங்களை முன்னிறுத்தியே, பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.எனினும், தற்போதைய அரசியல் சூழலில் இந்தப் பிரேரணை ஒரு கொள்கைச் சண்டையாக விட, அரசியல் அழுத்தத்தை உருவாக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகின்றது.இந்நிலையில், சிறுபான்மைக் கட்சிகள், குறிப்பாக வடக்கு -கிழக்கு மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ள கட்சிகள், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டையே எடுத்து வருகின்றன. அந்தவகையில், தமிழரசுக் கட்சியின் தற்போதைய நிலைப்பாடு, ஆட்சி – எதிர்க்கட்சி அரசியல் மோதல்களிலிருந்து விலகி, தமது மக்களின் அரசியல் மற்றும் நிர்வாக கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அணுகுமுறையாகவே கருதப்படுகின்றது. என்று சிவஞானம் சிறீதரன் எம்.பி. தெரிவித்தார்.இதேவேளை கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் தற்போது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளவே முடியாத அவதூறு பிரசாரங்களை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. தனது முகநூல் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-"பிரதமர் என்கின்ற ரீதியிலும் அவரது கட்சியின் ஒரு முக்கியஸ்தர் என்ற வகையிலும் கல்வி அமைச்சர் என்கின்ற ரீதியிலும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடன் எமது அமைப்புக்கும் எனக்கும் மிக முக்கியமான தீர்க்கமான கொள்கை முரண்கள் இருக்கின்ற போதிலும்,6ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பில் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளவே முடியாத அவதூறு பிரசாரங்களை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை." - என்றுள்ளது