• Nov 28 2024

களவாடப்பட்ட சொத்துக்களை கொண்டு வர செய்த முயற்சி என்ன? குற்றம் சுமத்திய சாணக்கியன் எம்.பி...!samugammedia

Tharun / Dec 7th 2023, 6:34 pm
image

நாட்டிலிருந்து களவாடப்பட்டுள்ள சொத்துக்களை மீள கொண்டு வர வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு முயற்சி செய்யவில்லை என சாணக்கியன் எம்பி குற்றம் சாட்டியுள்ளார்.  

இன்று இடம்பெற்றுள்ள பாராளுமன்ற அமர்வின்  போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர் என்ற ரீதியில் நிலைமாறு  கால நீதி என்பது காணாமல் போனோர் தொடர்பில் அல்லது மந்த உரிமை மீறல் தொடர்பில் சபையிலோ அல்லது இந்த அரசாங்கத்திடமோ பேசிப்பயனில்லை.  ஏனென்றால் இந்த அரசாங்கமும் இந்த அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற அமைச்சர்களும் கடந்த காலப்பகுதியில் எவ்வாறு நடந்து கொண்டோம் என்று பார்த்தோம். கடந்த சம்பவங்களை பார்க்கும் போது நல்லிணக்கத்துக்கு எதிர்மாறாகத்தான் அவர்கள் நடந்து கொள்கிறார்கள். ஆகவே சபை ஒத்திவைப்பு வேளையிலும்  தெளிவாக குறிப்பிட்டேன். அதாவது இந்த நாட்டில் நல்லிணக்கம் பற்றி பேசி பிரயோசனம் இல்லை. ஆகவே இந்த விடயம் பற்றி நான் பேச போவதும் இல்லை. ஆனால் இலங்கையில்   அனைவரும்  எதிர்பார்க்கின்ற இலங்கை பொருளாதார ரீதியான நெருக்கடிக்கு ஊட்டப்பட்டதற்கு பிற்பாடு  நாட்டு மக்கள் எதிர்பார்த்த நிலைக்கு கொண்டு வர வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு பாரிய பொறுப்புக்கள் இருந்தன. 

ஏனென்றால் வெளிநாட்டு தொடர்புகள் சர்வதேச தொடர்புகள் ஊடாக இந்த நாட்டுக்கும் சொத்துக்களை கொண்டு வரக்கூடிய பல வழிகளை அவர்கள் கண்டறிந்திருக்க வேண்டும். IMF  உடன்பாட்டை மேற்கொண்டோம். கடன் மீள் கட்டமைப்பு இருந்தாலும் இதை எப்பொதும் இதனை திருப்பி செலுத்தத்தான் வேண்டும். இதற்காக முதலீடு மேம்பாடுகள் வேண்டும், உல்லாசப்பயணிகளை கவர வேண்டும், இந்த விடயத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பாரிய பொறுப்பாற்ற வேண்டி இருந்தது. இந்த அமைச்சு இந்தவிடயம் தொடர்பான பொறுப்புக்களை சரியாக நிறைவேற்றுவதனை நாங்கள் காண்பதில்லை. 

இது தனிப்பட்ட ஒரு விமர்சனம் இல்லை. நாங்கள் காண்பதை தான் சொல்கின்றோம். ஏனென்றால் ஏராளமான நாடுகள் இலங்கையுடன் கொண்டிருந்த தொடர்புகளை முறித்தன. அது சீர் செய்யப்பட்டிருக்கின்றதா? 

G.S.P+ சலுகையை நாங்கள் விழுந்து மன்றாடி பெற்று கொண்டோம். அதை நீடித்து வைத்திருக்க அரசாங்கம் என்ன செய்கின்றது. இந்த நிலை மாறு கால நீதி என்கின்ற பொழுது தமிழ் மக்களினுடைய பிரச்சினை டயஸ் போராவுக்கு தேவையானதை நாங்கள் செய்ய போவதில்லை. இந்த மனித உரிமை ஆணையகம் என்பது இலங்கை மக்களுக்கு எதிரானது, இராசமாணிக்கத்துக்கு சார்பானது என்று பலரும் சொல்லலாம். சரி இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு இந்த களவு செய்யப்பட்ட சொத்துக்களை கொண்டு வர என்ன செய்திருக்கின்றது? 

இலங்கைக்குள் பலமில்லை என்றால் நிதியை களவாடிய ராஜபக்சவாக இருக்கலாம், வேறு தலைவர்களாக இருக்கலாம். இந்த நாட்டிலிருந்து களவாடப்பட்ட பணத்தை இந்த நாட்டுக்குள் கொண்டுவர இந்த அமைச்சு செய்திருக்கின்ற எத்தனிப்பு என்ன?

சிலர் சொல்லலாம் இது அமைச்சு செய்கின்ற செயற்பாடுகள் அல்ல? அரசாங்கம் செய்கின்ற செயல்பாடுகள் அல்ல என்று.  ஆனால்  இந்த சொத்துக்களை கொண்டுவர என்ன செய்திருக்கின்றது. பிலிப்பைன்சில் 21 பில்லியன் இந்த நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது.  பெருவில் 121 பில்லியன் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. U.S இல்  700பில்லியன் கொண்டு வரப்பட்டிருக்கிறது. ஆனால் அது அது ஒரு சிறிய தொகையாக இருக்கலாம். நாம் ஏதாவது நினைத்த ஒரு சிறிய ஒரு முயற்சியை காட்டுங்கள்.  என அவர் மேலும் கேட்டுள்ளார்.

களவாடப்பட்ட சொத்துக்களை கொண்டு வர செய்த முயற்சி என்ன குற்றம் சுமத்திய சாணக்கியன் எம்.பி.samugammedia நாட்டிலிருந்து களவாடப்பட்டுள்ள சொத்துக்களை மீள கொண்டு வர வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு முயற்சி செய்யவில்லை என சாணக்கியன் எம்பி குற்றம் சாட்டியுள்ளார்.  இன்று இடம்பெற்றுள்ள பாராளுமன்ற அமர்வின்  போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர் என்ற ரீதியில் நிலைமாறு  கால நீதி என்பது காணாமல் போனோர் தொடர்பில் அல்லது மந்த உரிமை மீறல் தொடர்பில் சபையிலோ அல்லது இந்த அரசாங்கத்திடமோ பேசிப்பயனில்லை.  ஏனென்றால் இந்த அரசாங்கமும் இந்த அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற அமைச்சர்களும் கடந்த காலப்பகுதியில் எவ்வாறு நடந்து கொண்டோம் என்று பார்த்தோம். கடந்த சம்பவங்களை பார்க்கும் போது நல்லிணக்கத்துக்கு எதிர்மாறாகத்தான் அவர்கள் நடந்து கொள்கிறார்கள். ஆகவே சபை ஒத்திவைப்பு வேளையிலும்  தெளிவாக குறிப்பிட்டேன். அதாவது இந்த நாட்டில் நல்லிணக்கம் பற்றி பேசி பிரயோசனம் இல்லை. ஆகவே இந்த விடயம் பற்றி நான் பேச போவதும் இல்லை. ஆனால் இலங்கையில்   அனைவரும்  எதிர்பார்க்கின்ற இலங்கை பொருளாதார ரீதியான நெருக்கடிக்கு ஊட்டப்பட்டதற்கு பிற்பாடு  நாட்டு மக்கள் எதிர்பார்த்த நிலைக்கு கொண்டு வர வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு பாரிய பொறுப்புக்கள் இருந்தன. ஏனென்றால் வெளிநாட்டு தொடர்புகள் சர்வதேச தொடர்புகள் ஊடாக இந்த நாட்டுக்கும் சொத்துக்களை கொண்டு வரக்கூடிய பல வழிகளை அவர்கள் கண்டறிந்திருக்க வேண்டும். IMF  உடன்பாட்டை மேற்கொண்டோம். கடன் மீள் கட்டமைப்பு இருந்தாலும் இதை எப்பொதும் இதனை திருப்பி செலுத்தத்தான் வேண்டும். இதற்காக முதலீடு மேம்பாடுகள் வேண்டும், உல்லாசப்பயணிகளை கவர வேண்டும், இந்த விடயத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பாரிய பொறுப்பாற்ற வேண்டி இருந்தது. இந்த அமைச்சு இந்தவிடயம் தொடர்பான பொறுப்புக்களை சரியாக நிறைவேற்றுவதனை நாங்கள் காண்பதில்லை. இது தனிப்பட்ட ஒரு விமர்சனம் இல்லை. நாங்கள் காண்பதை தான் சொல்கின்றோம். ஏனென்றால் ஏராளமான நாடுகள் இலங்கையுடன் கொண்டிருந்த தொடர்புகளை முறித்தன. அது சீர் செய்யப்பட்டிருக்கின்றதா G.S.P+ சலுகையை நாங்கள் விழுந்து மன்றாடி பெற்று கொண்டோம். அதை நீடித்து வைத்திருக்க அரசாங்கம் என்ன செய்கின்றது. இந்த நிலை மாறு கால நீதி என்கின்ற பொழுது தமிழ் மக்களினுடைய பிரச்சினை டயஸ் போராவுக்கு தேவையானதை நாங்கள் செய்ய போவதில்லை. இந்த மனித உரிமை ஆணையகம் என்பது இலங்கை மக்களுக்கு எதிரானது, இராசமாணிக்கத்துக்கு சார்பானது என்று பலரும் சொல்லலாம். சரி இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு இந்த களவு செய்யப்பட்ட சொத்துக்களை கொண்டு வர என்ன செய்திருக்கின்றது இலங்கைக்குள் பலமில்லை என்றால் நிதியை களவாடிய ராஜபக்சவாக இருக்கலாம், வேறு தலைவர்களாக இருக்கலாம். இந்த நாட்டிலிருந்து களவாடப்பட்ட பணத்தை இந்த நாட்டுக்குள் கொண்டுவர இந்த அமைச்சு செய்திருக்கின்ற எத்தனிப்பு என்னசிலர் சொல்லலாம் இது அமைச்சு செய்கின்ற செயற்பாடுகள் அல்ல அரசாங்கம் செய்கின்ற செயல்பாடுகள் அல்ல என்று.  ஆனால்  இந்த சொத்துக்களை கொண்டுவர என்ன செய்திருக்கின்றது. பிலிப்பைன்சில் 21 பில்லியன் இந்த நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது.  பெருவில் 121 பில்லியன் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. U.S இல்  700பில்லியன் கொண்டு வரப்பட்டிருக்கிறது. ஆனால் அது அது ஒரு சிறிய தொகையாக இருக்கலாம். நாம் ஏதாவது நினைத்த ஒரு சிறிய ஒரு முயற்சியை காட்டுங்கள்.  என அவர் மேலும் கேட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement