• Dec 12 2024

உலகளவில் திடீரென முடங்கிய வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்!

Chithra / Dec 12th 2024, 8:02 am
image

 

சர்வதேச ரீதியாகச் செயலிழந்திருந்த மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸ்அப் ஆகிய செயலிகளின் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. 

எனினும் ஃபேஸ்புக்கில் ஏற்பட்ட அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்பட்டதா? என்பது இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.

நேற்றிரவு 11 மணி முதல் வட்ஸ்அப் செயலியின் மூலம் குறுந்தகவல்கள் எதுவும் பகிர இயலவில்லை என்று எக்ஸ் தளத்தில் உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் முறைப்பாடுகளை அளித்து வந்தனர்.  

இந்த விடயம் தொடர்பில் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மெட்டா நிறுவனம், 99 சதவீத சிக்கல்கள் தீர்க்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. 

அத்துடன் இதனால் பாதிப்படைந்த பயன்பாட்டாளர்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச ரீதியாக 22,000க்கும் அதிகமானோர் பேஸ்புக் சிக்கல் தொடர்பில் முறைப்பாடளித்துள்ளதாக செயலிழப்பு - கண்காணிப்பு தளமான டவுன்டிடெக்டர் (Downdetector) தெரிவித்துள்ளது. 

அத்துடன் வட்ஸ்அப் சிக்கல் தொடர்பில் 18,000க்கும் அதிகமானோர் முறைப்பாடளித்துள்ளதாகவும் டவுன்டிடெக்டர் குறிப்பிட்டுள்ளது. 

செயலிழப்பு - கண்காணிப்பு தளமான டவுன்டிடெக்டரின் தகவல்களுக்கு அமைய, செயலிழப்பு சம்பவங்களின் எண்ணிக்கை கணிசமாக வேறுபடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும் இந்த செயலிழப்புகளுக்கான காரணம் தொடர்பில் இதுவரையில் தகவல் வெளிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் இலங்கையில் பல மணி நேரம் செயலற்ற நிலையில் இருந்த பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை வழமைக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உலகளவில் திடீரென முடங்கிய வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்  சர்வதேச ரீதியாகச் செயலிழந்திருந்த மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸ்அப் ஆகிய செயலிகளின் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. எனினும் ஃபேஸ்புக்கில் ஏற்பட்ட அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்பட்டதா என்பது இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.நேற்றிரவு 11 மணி முதல் வட்ஸ்அப் செயலியின் மூலம் குறுந்தகவல்கள் எதுவும் பகிர இயலவில்லை என்று எக்ஸ் தளத்தில் உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் முறைப்பாடுகளை அளித்து வந்தனர்.  இந்த விடயம் தொடர்பில் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மெட்டா நிறுவனம், 99 சதவீத சிக்கல்கள் தீர்க்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. அத்துடன் இதனால் பாதிப்படைந்த பயன்பாட்டாளர்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியாக 22,000க்கும் அதிகமானோர் பேஸ்புக் சிக்கல் தொடர்பில் முறைப்பாடளித்துள்ளதாக செயலிழப்பு - கண்காணிப்பு தளமான டவுன்டிடெக்டர் (Downdetector) தெரிவித்துள்ளது. அத்துடன் வட்ஸ்அப் சிக்கல் தொடர்பில் 18,000க்கும் அதிகமானோர் முறைப்பாடளித்துள்ளதாகவும் டவுன்டிடெக்டர் குறிப்பிட்டுள்ளது. செயலிழப்பு - கண்காணிப்பு தளமான டவுன்டிடெக்டரின் தகவல்களுக்கு அமைய, செயலிழப்பு சம்பவங்களின் எண்ணிக்கை கணிசமாக வேறுபடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த செயலிழப்புகளுக்கான காரணம் தொடர்பில் இதுவரையில் தகவல் வெளிப்படுத்தப்படவில்லை.இந்நிலையில் இலங்கையில் பல மணி நேரம் செயலற்ற நிலையில் இருந்த பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை வழமைக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement