• Mar 31 2025

சிவனொளிபாதமலைக்கு செல்ல முற்பட்டபோது விபரீதம்..! 100 மீற்றர் பள்ளத்தில் வீழ்ந்த இந்தியப் பிரஜை

Chithra / Mar 29th 2024, 5:29 pm
image

 

இரத்தினபுரி - சிவனொளிபாதமலை வீதியின் எஹலகனுவ பிரதேசத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் பாதுகாப்பு வேலியில் இருந்து சுமார் 100 மீற்றர் பள்ளத்தில் விழுந்துள்ளார்.

இந்தியாவின் மும்பையில் வசிக்கும் பாரத் சந்திரதாஸ் என்ற 25 வயதுடைய இளைஞரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

இன்று (29) அதிகாலை 4.45 மணியளவில் சிவனொளிபாதமலை வீதியின் ஊடாக சிவனொளிபாதமலையை  நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்துக்குள்ளானார்.

இதன்படி, உடனடியாக செயற்பட்ட சிவனொளிபாதமலை பொலிஸ் அதிகாரிகளால் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு அறியப்படுத்தியதை தொடர்ந்து மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் பள்ளத்தில் வீழ்ந்த நபர் மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நல்லதண்ணிய பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டு, காயமடைந்தவருடன் வந்த நபர்கள் நல்லதண்ணியவிற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டன.

சிவனொளிபாதமலைக்கு செல்ல முற்பட்டபோது விபரீதம். 100 மீற்றர் பள்ளத்தில் வீழ்ந்த இந்தியப் பிரஜை  இரத்தினபுரி - சிவனொளிபாதமலை வீதியின் எஹலகனுவ பிரதேசத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் பாதுகாப்பு வேலியில் இருந்து சுமார் 100 மீற்றர் பள்ளத்தில் விழுந்துள்ளார்.இந்தியாவின் மும்பையில் வசிக்கும் பாரத் சந்திரதாஸ் என்ற 25 வயதுடைய இளைஞரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.இன்று (29) அதிகாலை 4.45 மணியளவில் சிவனொளிபாதமலை வீதியின் ஊடாக சிவனொளிபாதமலையை  நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்துக்குள்ளானார்.இதன்படி, உடனடியாக செயற்பட்ட சிவனொளிபாதமலை பொலிஸ் அதிகாரிகளால் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு அறியப்படுத்தியதை தொடர்ந்து மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் பள்ளத்தில் வீழ்ந்த நபர் மீட்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் நல்லதண்ணிய பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டு, காயமடைந்தவருடன் வந்த நபர்கள் நல்லதண்ணியவிற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement