ஒவ்வொரு பாடசாலை மாணவருக்கும் ஆங்கிலக் கல்வி வழங்க வேண்டும் என்று வெள்ளை அறிக்கையை கொண்டு வந்தபோது ஜே.வி.பி அதனை எதிர்த்ததால் இலங்கையில் பெருமளவிலான இளைஞர்கள் ஆங்கிலக் கல்வியை இழந்ததாகவும், இளைஞர்களுக்கு சிறகுகளை வழங்கும்போது ஜே.வி.பி. அவர்களின் கால்களை சங்கிலியால் கட்டிப்போட்டதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
இந்நாட்டு இளைஞர்களுக்கு கல்வியே சிறகுகள் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,சிறகுகள் இருந்தால் எங்கும் பறக்க முடியும் எனவும், கல்வி அமைச்சராக இந்த நாட்டின் பாடசாலைக் கல்விக்காக பாரிய பணியை தான் ஆற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (08) இந்நாட்டு இளைஞர் சமூகத்துக்கு விசேட உரையொன்றை ஆற்றியபோதே இதனைக் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக உபவேந்தர்களையும் விரிவுரையாளர்களையும் ஜே.வி.பி கொன்றுள்ளதாகவும் அவர்களின் நடவடிக்கைகளால் இந்நாட்டின் கல்வித்துறையில் 10 வருட பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த அழிவை ஜே.வி.பி செய்யாமல் இருந்திருந்தால் இன்று எமது நாட்டில் சிறந்த கல்வி முறை இருந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
எம் இளைஞர்களின் இறக்கைகள் கல்விதான். இறக்கைகள் இருந்தால் எங்கு வேண்டுமானாலும் பறக்கலாம். அதனால்தான் இலவசக் கல்வி முறையை உருவாக்கினோம். டி.எஸ். சேனநாயக்கா அவர்களின் காலத்தில் மத்திய மகா வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டது. ஜே.ஆர் ஜயவர்தன ஜனாதிபதியின் காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
நான் கல்வி அமைச்சராக இருந்தபோது ஆசிரியர் பரீட்சை நடத்தி ஆசிரியர்களை நியமனம் செய்தேன். அத்தோடு கல்வி நிர்வாக சேவை நிறுவப்பட்டது. குறிப்பாக ஆசிரியர் பயிற்சிக்காக கல்விக் கல்லூரிகள் நிறுவப்பட்டன. கணினிக் கல்வியும் தொடங்கப்பட்டது. பின்னர் கல்வி இணையத்துடன் இணைக்கப்பட்டது.
பிரிவெனாக் கல்விக்காக பிரிவெனாக்களுக்கு நிதி வழங்கப்பட்டது. மேலும் தேசிய கல்வி நிறுவனம் நிறுவப்பட்டது. இதன் காரணமாக இன்று நாட்டில் கல்வி பெரிதும் மேம்பட்டுள்ளது. அப்போது ஒரே ஒரு பல்கலைக்கழகம்தான் இருந்தது. இன்று 17 பல்கலைக்கழகங்கள் உள்ளன.
நாட்டில் உள்ள ஒவ்வொரு பாடசாலை மாணவர்களுக்கும் ஆங்கிலக் கல்வி வழங்க வேண்டும் என்று வெள்ளை அறிக்கையில் முன்மொழிந்தேன். அப்போது ஜே.வி.பி. அந்த திட்டத்தை எதிர்த்தது. இதற்கு எதிராக பாடசாலைகளிலும் நாடுகளிலும் பெரும் பிரச்சாரம் செய்யப்பட்டது. அதனால் அதை நடைமுறைப்படுத்த எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, இன்று நமது இளைஞர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் ஆங்கிலக் கல்வியைப் பெறவில்லை.
மேலும், பல்கலைக்கழக கல்வி வளர்ச்சியில் 05-10 வருடங்கள் பின்னடைவு காணப்பட்டது. அப்போது, துணைவேந்தர் படுவத்தவிதான , துணைவேந்தர் ஸ்டென்லி விஜேசுந்தர போன்றவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக பலர் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறினர். மேலும், பல்கலைக்கழகங்களில் சேர விருப்பம் இருக்கவில்லை.
50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கொல்லப்பட்டனர். மேலும், பாடசாலைக் கல்வி முடங்கியது. இந்நிலையால் நமது கல்வி முறையில் சுமார் 10 ஆண்டுகள் பின்னடைவு ஏற்பட்டது. இந்த அழிவை ஜே.வி.பி. செய்யாமல் இருந்திருந்தால், இன்று மிகச் சிறந்த கல்விமுறையை நாம் பெற்றிருப்போம். எனவே, யார் கூச்சலிட்டாலும் English For All செயற்றிட்டத்தின் கீழ் அனைவருக்கும் ஆங்கில அறிவை வழங்கும் வாய்ப்பை வழங்க முடிவு செய்தேன் என்றார்.
இளைஞர்களுக்கு நாம் சிறகுகளை வழங்கும்போது ஜே.வி.பி. அவர்களின் கால்களுக்கு சங்கிலி போட்டது - ஜனாதிபதி ஒவ்வொரு பாடசாலை மாணவருக்கும் ஆங்கிலக் கல்வி வழங்க வேண்டும் என்று வெள்ளை அறிக்கையை கொண்டு வந்தபோது ஜே.வி.பி அதனை எதிர்த்ததால் இலங்கையில் பெருமளவிலான இளைஞர்கள் ஆங்கிலக் கல்வியை இழந்ததாகவும், இளைஞர்களுக்கு சிறகுகளை வழங்கும்போது ஜே.வி.பி. அவர்களின் கால்களை சங்கிலியால் கட்டிப்போட்டதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.இந்நாட்டு இளைஞர்களுக்கு கல்வியே சிறகுகள் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,சிறகுகள் இருந்தால் எங்கும் பறக்க முடியும் எனவும், கல்வி அமைச்சராக இந்த நாட்டின் பாடசாலைக் கல்விக்காக பாரிய பணியை தான் ஆற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (08) இந்நாட்டு இளைஞர் சமூகத்துக்கு விசேட உரையொன்றை ஆற்றியபோதே இதனைக் குறிப்பிட்டார்.பல்கலைக்கழக உபவேந்தர்களையும் விரிவுரையாளர்களையும் ஜே.வி.பி கொன்றுள்ளதாகவும் அவர்களின் நடவடிக்கைகளால் இந்நாட்டின் கல்வித்துறையில் 10 வருட பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த அழிவை ஜே.வி.பி செய்யாமல் இருந்திருந்தால் இன்று எமது நாட்டில் சிறந்த கல்வி முறை இருந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,எம் இளைஞர்களின் இறக்கைகள் கல்விதான். இறக்கைகள் இருந்தால் எங்கு வேண்டுமானாலும் பறக்கலாம். அதனால்தான் இலவசக் கல்வி முறையை உருவாக்கினோம். டி.எஸ். சேனநாயக்கா அவர்களின் காலத்தில் மத்திய மகா வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டது. ஜே.ஆர் ஜயவர்தன ஜனாதிபதியின் காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நான் கல்வி அமைச்சராக இருந்தபோது ஆசிரியர் பரீட்சை நடத்தி ஆசிரியர்களை நியமனம் செய்தேன். அத்தோடு கல்வி நிர்வாக சேவை நிறுவப்பட்டது. குறிப்பாக ஆசிரியர் பயிற்சிக்காக கல்விக் கல்லூரிகள் நிறுவப்பட்டன. கணினிக் கல்வியும் தொடங்கப்பட்டது. பின்னர் கல்வி இணையத்துடன் இணைக்கப்பட்டது. பிரிவெனாக் கல்விக்காக பிரிவெனாக்களுக்கு நிதி வழங்கப்பட்டது. மேலும் தேசிய கல்வி நிறுவனம் நிறுவப்பட்டது. இதன் காரணமாக இன்று நாட்டில் கல்வி பெரிதும் மேம்பட்டுள்ளது. அப்போது ஒரே ஒரு பல்கலைக்கழகம்தான் இருந்தது. இன்று 17 பல்கலைக்கழகங்கள் உள்ளன.நாட்டில் உள்ள ஒவ்வொரு பாடசாலை மாணவர்களுக்கும் ஆங்கிலக் கல்வி வழங்க வேண்டும் என்று வெள்ளை அறிக்கையில் முன்மொழிந்தேன். அப்போது ஜே.வி.பி. அந்த திட்டத்தை எதிர்த்தது. இதற்கு எதிராக பாடசாலைகளிலும் நாடுகளிலும் பெரும் பிரச்சாரம் செய்யப்பட்டது. அதனால் அதை நடைமுறைப்படுத்த எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, இன்று நமது இளைஞர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் ஆங்கிலக் கல்வியைப் பெறவில்லை. மேலும், பல்கலைக்கழக கல்வி வளர்ச்சியில் 05-10 வருடங்கள் பின்னடைவு காணப்பட்டது. அப்போது, துணைவேந்தர் படுவத்தவிதான , துணைவேந்தர் ஸ்டென்லி விஜேசுந்தர போன்றவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக பலர் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறினர். மேலும், பல்கலைக்கழகங்களில் சேர விருப்பம் இருக்கவில்லை.50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கொல்லப்பட்டனர். மேலும், பாடசாலைக் கல்வி முடங்கியது. இந்நிலையால் நமது கல்வி முறையில் சுமார் 10 ஆண்டுகள் பின்னடைவு ஏற்பட்டது. இந்த அழிவை ஜே.வி.பி. செய்யாமல் இருந்திருந்தால், இன்று மிகச் சிறந்த கல்விமுறையை நாம் பெற்றிருப்போம். எனவே, யார் கூச்சலிட்டாலும் English For All செயற்றிட்டத்தின் கீழ் அனைவருக்கும் ஆங்கில அறிவை வழங்கும் வாய்ப்பை வழங்க முடிவு செய்தேன் என்றார்.