• Oct 09 2024

வாழைச்சேனை பொலிசாரின் அச்சுறுத்தலுக்குள்ளான சிவில் சமூக செயற்பாட்டாளர்!

Chithra / Sep 8th 2024, 4:16 pm
image

Advertisement

 

நேற்று  இரவு  வாழைச்சேனை பொலிசாரின் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சிவில் சமூக செயற்பாட்டாளர்  வி.லவக்குமார் தெரிவித்தார்.

இன்று வாழைச்சேனை கிழக்கு ஊடக மன்றத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு   தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்று இரவு 10.05 மணிக்கு முற்சக்கர வண்டியில் 2 பொலிசார் உட்பட ஊர்காவல் படை வீரர் ஒருவரும் தமது வீட்டிற்கு வருகை வந்து கதவில் தட்டி  தூக்கத்தில் இருந்தவர்களை எழுப்பி முரண்பாடான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

தான் தனது மனைவிற்கு அடிப்பதாக தெரிவித்து  அவரது மனைவி 119 பொலிஸ் அவசரப்பிரிவில் அழைப்பு  விடுத்துள்ளதாகவும் அது தொடர்பாக விசாரிப்பதற்கு வந்துள்ளதாகவும் பொலிசார் கூறினர்.

மனைவி இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளதகவும் நீ சண்டித்தனம் காட்டாதே எனக் கூறி எச்சரிக்கை விடுத்தனர்.

மனைவியோ இவ்வாறதொரு சம்பவம் எனக்கு ஏற்படவில்லை. எனது கணவர் எனக்கு அடிக்கவில்லை. எனது கணவர் பல்வேறு சிவில் சமூக செயற்பாட்டு வேலைத்திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்.

வாழைச்சேனை பகுதி பொலிசார் எனது கணவரை ஏதோ வகையில் பழிவாங்குவதற்காக எனது பெயரை பயன்படுத்தி பொய்யான முறைப்பாட்டில் இரவு வீட்டிற்கு வந்து அச்சுறுத்தல் விடுத்தனர் என்றார்.

இதேவேளை ஜனாதிபதி வடக்கு கிழக்கிற்கு சென்றால் அங்கெல்லாம் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் சிவில் சமூக உணர்வாளர்கள்  பாதுகாப்பு தரப்பினரினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

நேற்று வவுனியாவில சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவருக்கு இவ்வாறான சம்பவத்துடன் தொடர்பான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் செங்கலடிக்கு ஜனாதிபதி வந்த வேளை மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேச்சல் தரை விவகாரம்  தொடர்பாக இடம்பெற்ற நியாயமான நீதி வேண்டிய கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கு கொண்டமைக்காக  ஏறாவூர் பொலிசாரினால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நடபெற்றுக்கொண்டிருப்பதாக கூறினார்.

இன்றைய தினம் ஜனாதிபதி தமது வீட்டிற்கு அருகில் உள்ள கிரான் கோரகல்லிமடுவிற்கு தேர்தல் பிரச்சார கூட்ட நிகழ்வில் பங்கு கொள்ள வருகை தரவுள்ளதால், பொலிசாரின் இவ்வாறனதொரு  பொய் குற்றச்சாட்டை கூறி என்னை மிரட்டலுக்கு உள்ளாக்குவதாகவும், இதற்கு வாழைச்சேனை பொலிசாரும் பொலிஸ் பொறுப்பதிகாரியும் உடந்தையாகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிசாரின் அச்சுறுத்தலுக்குள்ளான சிவில் சமூக செயற்பாட்டாளர்  நேற்று  இரவு  வாழைச்சேனை பொலிசாரின் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சிவில் சமூக செயற்பாட்டாளர்  வி.லவக்குமார் தெரிவித்தார்.இன்று வாழைச்சேனை கிழக்கு ஊடக மன்றத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு   தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,நேற்று இரவு 10.05 மணிக்கு முற்சக்கர வண்டியில் 2 பொலிசார் உட்பட ஊர்காவல் படை வீரர் ஒருவரும் தமது வீட்டிற்கு வருகை வந்து கதவில் தட்டி  தூக்கத்தில் இருந்தவர்களை எழுப்பி முரண்பாடான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.தான் தனது மனைவிற்கு அடிப்பதாக தெரிவித்து  அவரது மனைவி 119 பொலிஸ் அவசரப்பிரிவில் அழைப்பு  விடுத்துள்ளதாகவும் அது தொடர்பாக விசாரிப்பதற்கு வந்துள்ளதாகவும் பொலிசார் கூறினர்.மனைவி இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளதகவும் நீ சண்டித்தனம் காட்டாதே எனக் கூறி எச்சரிக்கை விடுத்தனர்.மனைவியோ இவ்வாறதொரு சம்பவம் எனக்கு ஏற்படவில்லை. எனது கணவர் எனக்கு அடிக்கவில்லை. எனது கணவர் பல்வேறு சிவில் சமூக செயற்பாட்டு வேலைத்திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்.வாழைச்சேனை பகுதி பொலிசார் எனது கணவரை ஏதோ வகையில் பழிவாங்குவதற்காக எனது பெயரை பயன்படுத்தி பொய்யான முறைப்பாட்டில் இரவு வீட்டிற்கு வந்து அச்சுறுத்தல் விடுத்தனர் என்றார்.இதேவேளை ஜனாதிபதி வடக்கு கிழக்கிற்கு சென்றால் அங்கெல்லாம் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் சிவில் சமூக உணர்வாளர்கள்  பாதுகாப்பு தரப்பினரினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.நேற்று வவுனியாவில சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவருக்கு இவ்வாறான சம்பவத்துடன் தொடர்பான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கடந்த மாதம் செங்கலடிக்கு ஜனாதிபதி வந்த வேளை மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேச்சல் தரை விவகாரம்  தொடர்பாக இடம்பெற்ற நியாயமான நீதி வேண்டிய கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கு கொண்டமைக்காக  ஏறாவூர் பொலிசாரினால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நடபெற்றுக்கொண்டிருப்பதாக கூறினார்.இன்றைய தினம் ஜனாதிபதி தமது வீட்டிற்கு அருகில் உள்ள கிரான் கோரகல்லிமடுவிற்கு தேர்தல் பிரச்சார கூட்ட நிகழ்வில் பங்கு கொள்ள வருகை தரவுள்ளதால், பொலிசாரின் இவ்வாறனதொரு  பொய் குற்றச்சாட்டை கூறி என்னை மிரட்டலுக்கு உள்ளாக்குவதாகவும், இதற்கு வாழைச்சேனை பொலிசாரும் பொலிஸ் பொறுப்பதிகாரியும் உடந்தையாகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement