தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான மக்கள் தீர்ப்பு என்ன என்பது இன்று தெரிந்துவிடும் நிலையில், மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் பணிகள் இன்று காலை ஆரம்பமாகின்றன.
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்ட அறைகளில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 8:00 மணிக்கு அதிகாரபூர்வமாக வாக்கு எண்ணிக்கை தொடங்குகின்றது.
இந்தத் தேர்தலில் தமிழகத்தின் பிரதான சக்திகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவுவதால், முடிவுகள் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையங்களில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாதவாறு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகப் பொலிஸைச் சேர்ந்த சுமார் 18 ஆயிரம் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், 40 இற்கும் மேற்பட்ட துணை இராணுவப் படைப்பிரிவுகளும் கண்காணிப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன.
* இன்று காலை 8:00 மணி முதல் தபால் மூலமான (Postal Ballots) வாக்குகள் எண்ணப்படும்.
* இன்று காலை 8:30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
ஒவ்வொரு சுற்றின் முடிவுகளும் அந்தந்த மையங்களில் உள்ள பொது ஒலிபெருக்கி மூலம் உடனுக்குடன் அறிவிக்கப்படும்.
அத்துடன், தேர்தல் முடிவுகளை https://tnelections2026.in/results.html என்ற இணையதளத்திலும் பொதுமக்கள் நேரலையாகப் பார்வையிட முடியும் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழகத்தின் அடுத்த ஆட்சிக் கட்டிலை அலங்கரிக்கப் போவது யார் என்பது இன்று மாலைக்குள் உறுதியாகிவிடும்.
தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் - வாக்கு எண்ணும் பணி இன்று காலை ஆரம்பம் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான மக்கள் தீர்ப்பு என்ன என்பது இன்று தெரிந்துவிடும் நிலையில், மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் பணிகள் இன்று காலை ஆரம்பமாகின்றன.தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்ட அறைகளில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 8:00 மணிக்கு அதிகாரபூர்வமாக வாக்கு எண்ணிக்கை தொடங்குகின்றது.இந்தத் தேர்தலில் தமிழகத்தின் பிரதான சக்திகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவுவதால், முடிவுகள் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.வாக்கு எண்ணும் மையங்களில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாதவாறு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.தமிழகப் பொலிஸைச் சேர்ந்த சுமார் 18 ஆயிரம் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், 40 இற்கும் மேற்பட்ட துணை இராணுவப் படைப்பிரிவுகளும் கண்காணிப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன.* இன்று காலை 8:00 மணி முதல் தபால் மூலமான (Postal Ballots) வாக்குகள் எண்ணப்படும்.* இன்று காலை 8:30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.ஒவ்வொரு சுற்றின் முடிவுகளும் அந்தந்த மையங்களில் உள்ள பொது ஒலிபெருக்கி மூலம் உடனுக்குடன் அறிவிக்கப்படும்.அத்துடன், தேர்தல் முடிவுகளை https://tnelections2026.in/results.html என்ற இணையதளத்திலும் பொதுமக்கள் நேரலையாகப் பார்வையிட முடியும் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தமிழகத்தின் அடுத்த ஆட்சிக் கட்டிலை அலங்கரிக்கப் போவது யார் என்பது இன்று மாலைக்குள் உறுதியாகிவிடும்.