ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை இன்னும் இரு வாரங்களில் அறிவிப்போம் என கடற்றொழில் வளங்கள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி அமைப்பதற்கு சகல தரப்பினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.
கூட்டணி தொடர்பில் வெகுவிரைவில் உறுதியான தீர்மானம் எடுக்கப்படும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பொதுவேட்பாளராக களமிறக்க கட்சி மட்டத்தில் தீர்மானம் எடுத்தால் அதற்கு முழுமையாக ஆதரவு வழங்குவோம்.
யாரை வேட்பாளராக அறிவிப்பது என்பது தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எமது ஜனாதிபதி வேட்பாளரை இன்னும் இருவாரங்களில் அறிவிப்போம் என்றார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார். இரு வாரங்களில் வெளியாகவுள்ள அறிவிப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை இன்னும் இரு வாரங்களில் அறிவிப்போம் என கடற்றொழில் வளங்கள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்தார்.நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி அமைப்பதற்கு சகல தரப்பினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். கூட்டணி தொடர்பில் வெகுவிரைவில் உறுதியான தீர்மானம் எடுக்கப்படும்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பொதுவேட்பாளராக களமிறக்க கட்சி மட்டத்தில் தீர்மானம் எடுத்தால் அதற்கு முழுமையாக ஆதரவு வழங்குவோம்.யாரை வேட்பாளராக அறிவிப்பது என்பது தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.எமது ஜனாதிபதி வேட்பாளரை இன்னும் இருவாரங்களில் அறிவிப்போம் என்றார்.