• Nov 25 2024

துமிந்தவுக்கு ஏன் பொதுமன்னிப்பு வழங்கினேன்..? நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள சத்தியக் கடதாசியில் கோட்டா விளக்கம்

Chithra / Jan 17th 2024, 3:10 pm
image


 

நாட்டின் நலனை கருத்தில் கொண்டே துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பை வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சத்தியக் கடதாசியில் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சத்தியக் கடதாசியில் தனிப்பட்ட அல்லது அரசியல் தொடர்புகள் காரணமாக தான் பொதுமன்னிப்பு வழங்கியதாக தெரிவிக்கப்படுவதை முன்னாள் ஜனாதிபதி மறுத்துள்ளார்.

எனக்கு வழங்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளில்,

துமிந்த சில்வாவை சிறையில் வைத்திருப்பது அவரது உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

வேறு பல காரணங்களை முன்வைத்து அவருக்கு பொதுமன்னிப்பை வழங்கவேண்டும் என்ற கோரிக்கை எனக்கு விடுக்கப்பட்டமை நினைவில் உள்ளது என கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

துமிந்த சில்வாவிற்கு நான் பொதுமன்னிப்பை வழங்க வேண்டியது அவசியம் என தெரிவிக்கும் வேறு பல விடயங்கள் ஆவணங்கள் காணப்பட்டன.

நான் தேசிய நலனை கருத்தில் கொண்டே பொதுமன்னிப்பை வழங்கினேன் எனவும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள சத்தியக்கடதாசியில் தெரிவித்துள்ளார்.

துமிந்த சில்வாவிற்கு வழங்கிய பொதுமன்னிப்பு சட்டபூர்வமானதல்ல என தெரிவித்து நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ள உத்தரவில் இந்த சத்தியக்கடதாசியும் இடம்பெற்றுள்ளது.

துமிந்தவுக்கு ஏன் பொதுமன்னிப்பு வழங்கினேன். நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள சத்தியக் கடதாசியில் கோட்டா விளக்கம்  நாட்டின் நலனை கருத்தில் கொண்டே துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பை வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சத்தியக் கடதாசியில் தெரிவித்துள்ளார்.நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சத்தியக் கடதாசியில் தனிப்பட்ட அல்லது அரசியல் தொடர்புகள் காரணமாக தான் பொதுமன்னிப்பு வழங்கியதாக தெரிவிக்கப்படுவதை முன்னாள் ஜனாதிபதி மறுத்துள்ளார்.எனக்கு வழங்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளில்,துமிந்த சில்வாவை சிறையில் வைத்திருப்பது அவரது உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.வேறு பல காரணங்களை முன்வைத்து அவருக்கு பொதுமன்னிப்பை வழங்கவேண்டும் என்ற கோரிக்கை எனக்கு விடுக்கப்பட்டமை நினைவில் உள்ளது என கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.துமிந்த சில்வாவிற்கு நான் பொதுமன்னிப்பை வழங்க வேண்டியது அவசியம் என தெரிவிக்கும் வேறு பல விடயங்கள் ஆவணங்கள் காணப்பட்டன.நான் தேசிய நலனை கருத்தில் கொண்டே பொதுமன்னிப்பை வழங்கினேன் எனவும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள சத்தியக்கடதாசியில் தெரிவித்துள்ளார்.துமிந்த சில்வாவிற்கு வழங்கிய பொதுமன்னிப்பு சட்டபூர்வமானதல்ல என தெரிவித்து நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ள உத்தரவில் இந்த சத்தியக்கடதாசியும் இடம்பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement