• Nov 28 2024

வடக்கில் ரணில் பங்கேற்ற அரச நிகழ்வு மேடைகளில் கூட்டமைப்பு ஏறியது ஏன்? - சுமந்திரன் விளக்கம்

Chithra / May 28th 2024, 9:39 am
image


"அரச நிகழ்வுகளில் நாம் பங்கெடுக்காமல் இருப்பது என்பது எங்களைத் தெரிவு செய்து நாடாளுமன்றம் அனுப்பிய மக்களுடைய ஆணையை மீறுவதாகக் கூட இருக்கலாம். அதனால் வடக்குக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்தபோது அவர் கலந்துகொண்டிருந்த அரச நிகழ்வு மேடைகளில் ஏறினோம்."

- இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போது மேற்படி விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்குக்கு விஜயம் செய்தபோது அவர் கலந்துகொண்டிருந்த மேடைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தமை சம்பந்தமாகப் பலதரப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக இங்கு ஜனாதிபதி பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தார். அதிலே சில நிகழ்வுகள் அரச நிகழ்வுகள்.

அரச நிகழ்வுகளிலே நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்வது முக்கியமான ஒரு விடயம். ஆனாலும், நாங்கள் அந்த நிகழ்வுகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று ஒரு முடிவெடுத்து தீர்மானித்தால் அதனை நாங்கள் புறக்கணிக்கலாம். எனினும், அதற்கான காரணம் இருக்க வேண்டும்.

ஆனால், புறக்கணிப்பு எனத் தீர்மானிக்காமல் வெறுமனே அந்த நிகழ்வுகளில் பங்கெடுக்காமல் இருப்பது என்பது எங்களைத் தெரிவு செய்து நாடாளுமன்றம் அனுப்பிய மக்களுடைய ஆணையை மீறுவதாகக் கூட இருக்கலாம்.

இதில் விசேடமாக யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் ஜனாதிபதி கலந்துகொண்ட நிகழ்வுகள் வைத்தியசாலைகள் சம்பந்தமான நிகழ்வுகள்தான்.

அவை வடக்கு மாகாண சபை இருந்த காலத்திலே மாகாண சபையின் சுகாதார அமைச்சராக இருந்த சக்தியலிங்கத்தின் முயற்சியின் பலனாக முன்னெடுக்கப்பட்டவைதான். அவை இப்போதுதான் திறந்து வைக்கப்பட்டுள்ளன. ஆகவே, இதிலே முனைப்பாகச் செயற்பட்டவர்கள் நாங்கள்தான்.

அதனை ஜனாதிபதி இப்போது திறந்து வைத்திருந்தாலும் கூட அதிலே மக்கள் சார்பாக நாங்கள் செய்த பங்களிப்பு பதிவு செய்யப்பட வேண்டும். ஆகையினால் அந்த நிகழ்வுகளிலே நாங்கள் கலந்துகொள்வது பொருத்தமான ஒரு விடயம்.

இதிலே மிகவும் சந்தோஷத்துக்குரிய ஒரு விடயம் என்னவெனில் நேற்று (நேற்றுமுன்தினம்) வவுனியாவிலே நடைபெற்ற இப்படியான ஒரு நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் மாகாண அமைச்சர் சத்தியலிங்கம் இதற்குப் பொறுப்பானவர் என மேடையிலையே அவர் கௌரவிக்கப்பட்டிருந்தார். இதனை அரசே மேடையிலே கண்டு கொண்டது.

ஆகவே, வடக்கு மாகாண சபை குறித்து பலருக்கு பலவிதமான கருத்துக்கள் இருந்தாலும் கல்வி மற்றும் சுகாதார அமைச்சுப் பொறுப்புகளில் இருந்த எமது கட்சியினர் அந்தந்தத் துறைகளிலே மிகவும் காத்திரமான பங்களிப்பைச் செய்திருந்தார்கள்.  அப்படியான செயற்பாட்டு நிகழ்வுகளிலே மக்கள் பிரதிநிதிகளாக நாம் கலந்துகொண்டமை நல்ல விடயமாகத்தான் பார்க்கின்றேன்.

அதேவேளை, வடக்கில் மக்களுக்குக் காணி உரிமைப் பத்திரங்களை ஜனாதிபதி வழங்கி வைத்துள்ளார். இதிலே பலருக்கு விளக்கம் குறைவாக இருக்கின்றது.

இவற்றில் அனேகமானவை மக்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த வந்த காணிகள். இப்போதும் அதிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். மேலும், சில காணிகள் பொமிற் காணிகளாக இருந்திருக்கின்றன. அதற்கான உரிமமும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

மேலும் சிலருக்கு அரசால் காணி உரிமம் கொடுக்கப்பட்டிருந்தாலும் சில மட்டுப்படுத்தல்கள் அதிலே இருந்தன. 

அந்த மட்டுப்படுத்தல்கள் எல்லாத்தையும் நீக்கி முழு உரித்தும் அவர்கள் கையிலே கொடுக்கப்பட்டுள்ளது.

இது எமது மக்களின் காணிகள். அவை அந்த மக்களிடமே போய்ச் சேருகின்ற விடயம். ஆகவே, இதிலே மக்கள் பிரதிநிதிகளாக நாங்கள் கலந்துகொள்வதும் காணி உரிமங்களை அவர்களிடம் வழங்குகின்றபோது அவர்கள் அதைப் பேணிப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு வழங்கும் வகையில் அறிவுரை சொல்வதும் எங்களுடைய கடமையாக இருக்கின்றது.

ஏனென்றால் இந்தக் காண உரிமைகளை முழுமையாக மக்களிடத்தில் கையளித்து விட்டால் அவர்கள் அதைத்  தமக்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொள்ளலாம்.

அவ்வாறு மக்களிடத்தே இந்தப் பொறுப்பைக் கொடுக்கின்றபோது அந்தப் பொறுப்பை அவர்கள் சரியான முறையில் நிர்வகிக்க வேண்டும். குறிப்பாக வெளியாட்களுக்கு விற்க வேண்டாம். ஈடு வைத்து இழந்து விட வேண்டாம். 

வெளிநாட்டு நிறுவனங்கள் வந்து இதனைக் கொல்வனவு செய்வதை அனுமதிக்க வேண்டாம் போன்ற கருத்துக்களை மக்களிடத்தே சொல்ல வேண்டிய தேவை நிச்சயமாக இருந்தது.

இதற்கமைய அந்தக் கருத்துக்கள் எமது மக்களிடத்தே தற்போது சொல்லப்பட்டிருக்கின்றன. ஆகவே, எங்களுடைய நிலத்தின் முழுமையான உரித்தை எங்கள் மக்களுக்கே கொடுக்கின்ற நிகழ்வுகளில் நாங்கள் பங்கெடுப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கின்றது.

ஆனால், ஐனாதிபதித் தேர்தல் வரவிருக்கின்ற இந்தச் சமயத்திலே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கமும் அதிலே ஒரு வேட்பாளராக கலந்துகொள்வார் என்று பலர் நம்பியிருக்கின்ற வேளையிலே இந்தக் கூட்டங்களிலே பங்குபற்றிய வேறு சிலர் இந்தக் கூட்டங்களைத் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் போல் நடத்தியிருந்தார்கள்.

இதனை யாழ்பாணம் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற முதல் கூட்டத்திலேயே நான் நேரடியாகவே சொல்லியிருந்தேன். 

அதாவது இது ஒரு அரச நிகழ்வு என்றும், இதில் தேர்தல் பரப்புரை போன்ற சாயம் தென்படுகின்றது என்றும், ஆனால் இது தேர்தல் பரப்புரை அல்ல என்றும் சொல்லியிருந்தேன்.

இறுதியாக கிளிநொச்சியில் நான் பேசிய போதும் இது தேர்தல் பரப்புரைக் கூட்டம் போன்றே இருக்கின்றது என்றும், அப்படி இது இருக்கக்கூடாது என்றும் கூறியிருந்தேன்.

இப்படி இதை உபயோகிக்கின்றவர்கள் ஐனாதிபதியையும் அவமதிக்கின்றார்கள் என்ற கருத்தையும் சொல்லியிருந்தேன்.

அது மட்டுமல்லாமல் அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக விசேடமாக சுகாதாரத்துறை, கல்வி, காணி அதிகாரம் போன்ற விடயங்கள் சம்பந்தமாகவும், எங்கள் மக்களுடைய எதிர்பார்ப்பு, அரசியல் அபிலாஷைகள், எங்கள் கட்சியினுடைய நிலைப்பாடு மற்றும் தமிழ் மக்களுடைய அரசியல் நிலைப்பாடுகள் இந்தக் கூட்டங்களிலே சொல்லப்பட்டிருக்கின்றன.

ஏனென்றால் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனப் பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படும் எனவும், கூடிய அதிகாரப் பகிர்வோடு இது செய்யப்படும் என்றும் சொல்லுகிற நிலையில் அவரிடத்தே நாம் இவற்றையெல்லாம் இங்கு வைத்து சொல்லியிருக்கின்றோம்.

மத்திய அரசு இப்போது செய்கின்ற இந்த விடயங்கள் அனைத்தும் மாகாண சபைக்குரிய விடயங்கள். மாகாணத்துக்குரிய அதிகாரங்களை மாகாணங்கள் முழுமையாகச் செயற்படுத்த வேண்டும். அரசியல் தீர்வு வழங்கப்படும் என்று சொல்லுகின்ற நீங்கள் இந்த விடயங்களிலே மத்திய அரசின் செயற்பாட்டைத் தவிர்த்து மாகாண அரசு அதனைச் செய்வதை உறுதி செய்ய வேண்டுமென்ற கருத்தை ஒவ்வொரு மேடைகளிலும் நான் சொல்லியிருக்கின்றேன்." - என்றார்.

வடக்கில் ரணில் பங்கேற்ற அரச நிகழ்வு மேடைகளில் கூட்டமைப்பு ஏறியது ஏன் - சுமந்திரன் விளக்கம் "அரச நிகழ்வுகளில் நாம் பங்கெடுக்காமல் இருப்பது என்பது எங்களைத் தெரிவு செய்து நாடாளுமன்றம் அனுப்பிய மக்களுடைய ஆணையை மீறுவதாகக் கூட இருக்கலாம். அதனால் வடக்குக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்தபோது அவர் கலந்துகொண்டிருந்த அரச நிகழ்வு மேடைகளில் ஏறினோம்."- இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போது மேற்படி விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்குக்கு விஜயம் செய்தபோது அவர் கலந்துகொண்டிருந்த மேடைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தமை சம்பந்தமாகப் பலதரப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.குறிப்பாக இங்கு ஜனாதிபதி பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தார். அதிலே சில நிகழ்வுகள் அரச நிகழ்வுகள்.அரச நிகழ்வுகளிலே நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்வது முக்கியமான ஒரு விடயம். ஆனாலும், நாங்கள் அந்த நிகழ்வுகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று ஒரு முடிவெடுத்து தீர்மானித்தால் அதனை நாங்கள் புறக்கணிக்கலாம். எனினும், அதற்கான காரணம் இருக்க வேண்டும்.ஆனால், புறக்கணிப்பு எனத் தீர்மானிக்காமல் வெறுமனே அந்த நிகழ்வுகளில் பங்கெடுக்காமல் இருப்பது என்பது எங்களைத் தெரிவு செய்து நாடாளுமன்றம் அனுப்பிய மக்களுடைய ஆணையை மீறுவதாகக் கூட இருக்கலாம்.இதில் விசேடமாக யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் ஜனாதிபதி கலந்துகொண்ட நிகழ்வுகள் வைத்தியசாலைகள் சம்பந்தமான நிகழ்வுகள்தான்.அவை வடக்கு மாகாண சபை இருந்த காலத்திலே மாகாண சபையின் சுகாதார அமைச்சராக இருந்த சக்தியலிங்கத்தின் முயற்சியின் பலனாக முன்னெடுக்கப்பட்டவைதான். அவை இப்போதுதான் திறந்து வைக்கப்பட்டுள்ளன. ஆகவே, இதிலே முனைப்பாகச் செயற்பட்டவர்கள் நாங்கள்தான்.அதனை ஜனாதிபதி இப்போது திறந்து வைத்திருந்தாலும் கூட அதிலே மக்கள் சார்பாக நாங்கள் செய்த பங்களிப்பு பதிவு செய்யப்பட வேண்டும். ஆகையினால் அந்த நிகழ்வுகளிலே நாங்கள் கலந்துகொள்வது பொருத்தமான ஒரு விடயம்.இதிலே மிகவும் சந்தோஷத்துக்குரிய ஒரு விடயம் என்னவெனில் நேற்று (நேற்றுமுன்தினம்) வவுனியாவிலே நடைபெற்ற இப்படியான ஒரு நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் மாகாண அமைச்சர் சத்தியலிங்கம் இதற்குப் பொறுப்பானவர் என மேடையிலையே அவர் கௌரவிக்கப்பட்டிருந்தார். இதனை அரசே மேடையிலே கண்டு கொண்டது.ஆகவே, வடக்கு மாகாண சபை குறித்து பலருக்கு பலவிதமான கருத்துக்கள் இருந்தாலும் கல்வி மற்றும் சுகாதார அமைச்சுப் பொறுப்புகளில் இருந்த எமது கட்சியினர் அந்தந்தத் துறைகளிலே மிகவும் காத்திரமான பங்களிப்பைச் செய்திருந்தார்கள்.  அப்படியான செயற்பாட்டு நிகழ்வுகளிலே மக்கள் பிரதிநிதிகளாக நாம் கலந்துகொண்டமை நல்ல விடயமாகத்தான் பார்க்கின்றேன்.அதேவேளை, வடக்கில் மக்களுக்குக் காணி உரிமைப் பத்திரங்களை ஜனாதிபதி வழங்கி வைத்துள்ளார். இதிலே பலருக்கு விளக்கம் குறைவாக இருக்கின்றது.இவற்றில் அனேகமானவை மக்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த வந்த காணிகள். இப்போதும் அதிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். மேலும், சில காணிகள் பொமிற் காணிகளாக இருந்திருக்கின்றன. அதற்கான உரிமமும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.மேலும் சிலருக்கு அரசால் காணி உரிமம் கொடுக்கப்பட்டிருந்தாலும் சில மட்டுப்படுத்தல்கள் அதிலே இருந்தன. அந்த மட்டுப்படுத்தல்கள் எல்லாத்தையும் நீக்கி முழு உரித்தும் அவர்கள் கையிலே கொடுக்கப்பட்டுள்ளது.இது எமது மக்களின் காணிகள். அவை அந்த மக்களிடமே போய்ச் சேருகின்ற விடயம். ஆகவே, இதிலே மக்கள் பிரதிநிதிகளாக நாங்கள் கலந்துகொள்வதும் காணி உரிமங்களை அவர்களிடம் வழங்குகின்றபோது அவர்கள் அதைப் பேணிப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு வழங்கும் வகையில் அறிவுரை சொல்வதும் எங்களுடைய கடமையாக இருக்கின்றது.ஏனென்றால் இந்தக் காண உரிமைகளை முழுமையாக மக்களிடத்தில் கையளித்து விட்டால் அவர்கள் அதைத்  தமக்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொள்ளலாம்.அவ்வாறு மக்களிடத்தே இந்தப் பொறுப்பைக் கொடுக்கின்றபோது அந்தப் பொறுப்பை அவர்கள் சரியான முறையில் நிர்வகிக்க வேண்டும். குறிப்பாக வெளியாட்களுக்கு விற்க வேண்டாம். ஈடு வைத்து இழந்து விட வேண்டாம். வெளிநாட்டு நிறுவனங்கள் வந்து இதனைக் கொல்வனவு செய்வதை அனுமதிக்க வேண்டாம் போன்ற கருத்துக்களை மக்களிடத்தே சொல்ல வேண்டிய தேவை நிச்சயமாக இருந்தது.இதற்கமைய அந்தக் கருத்துக்கள் எமது மக்களிடத்தே தற்போது சொல்லப்பட்டிருக்கின்றன. ஆகவே, எங்களுடைய நிலத்தின் முழுமையான உரித்தை எங்கள் மக்களுக்கே கொடுக்கின்ற நிகழ்வுகளில் நாங்கள் பங்கெடுப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கின்றது.ஆனால், ஐனாதிபதித் தேர்தல் வரவிருக்கின்ற இந்தச் சமயத்திலே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கமும் அதிலே ஒரு வேட்பாளராக கலந்துகொள்வார் என்று பலர் நம்பியிருக்கின்ற வேளையிலே இந்தக் கூட்டங்களிலே பங்குபற்றிய வேறு சிலர் இந்தக் கூட்டங்களைத் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் போல் நடத்தியிருந்தார்கள்.இதனை யாழ்பாணம் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற முதல் கூட்டத்திலேயே நான் நேரடியாகவே சொல்லியிருந்தேன். அதாவது இது ஒரு அரச நிகழ்வு என்றும், இதில் தேர்தல் பரப்புரை போன்ற சாயம் தென்படுகின்றது என்றும், ஆனால் இது தேர்தல் பரப்புரை அல்ல என்றும் சொல்லியிருந்தேன்.இறுதியாக கிளிநொச்சியில் நான் பேசிய போதும் இது தேர்தல் பரப்புரைக் கூட்டம் போன்றே இருக்கின்றது என்றும், அப்படி இது இருக்கக்கூடாது என்றும் கூறியிருந்தேன்.இப்படி இதை உபயோகிக்கின்றவர்கள் ஐனாதிபதியையும் அவமதிக்கின்றார்கள் என்ற கருத்தையும் சொல்லியிருந்தேன்.அது மட்டுமல்லாமல் அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக விசேடமாக சுகாதாரத்துறை, கல்வி, காணி அதிகாரம் போன்ற விடயங்கள் சம்பந்தமாகவும், எங்கள் மக்களுடைய எதிர்பார்ப்பு, அரசியல் அபிலாஷைகள், எங்கள் கட்சியினுடைய நிலைப்பாடு மற்றும் தமிழ் மக்களுடைய அரசியல் நிலைப்பாடுகள் இந்தக் கூட்டங்களிலே சொல்லப்பட்டிருக்கின்றன.ஏனென்றால் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனப் பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படும் எனவும், கூடிய அதிகாரப் பகிர்வோடு இது செய்யப்படும் என்றும் சொல்லுகிற நிலையில் அவரிடத்தே நாம் இவற்றையெல்லாம் இங்கு வைத்து சொல்லியிருக்கின்றோம்.மத்திய அரசு இப்போது செய்கின்ற இந்த விடயங்கள் அனைத்தும் மாகாண சபைக்குரிய விடயங்கள். மாகாணத்துக்குரிய அதிகாரங்களை மாகாணங்கள் முழுமையாகச் செயற்படுத்த வேண்டும். அரசியல் தீர்வு வழங்கப்படும் என்று சொல்லுகின்ற நீங்கள் இந்த விடயங்களிலே மத்திய அரசின் செயற்பாட்டைத் தவிர்த்து மாகாண அரசு அதனைச் செய்வதை உறுதி செய்ய வேண்டுமென்ற கருத்தை ஒவ்வொரு மேடைகளிலும் நான் சொல்லியிருக்கின்றேன்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement