• Nov 28 2024

உரிமைகளே இல்லாத நாட்டில் எதற்கு மனித உரிமைகள் தினம்..! வடகிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

Chithra / Dec 10th 2023, 12:23 pm
image


சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டம் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது சங்கம் முன்பாக இடம்பெற்றது.

கடந்த 15 வருடங்களாக தமக்கு இழைக்கப்படும் மனித  உரிமை  மீறல்கள் தொடர்பாக போராடிவரும் நிலையில், இதுவரையில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை என தெரிவித்து  சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் கண்டன ஆர்ப்பாட்டாக முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், தமக்கு இழைப்பட்ட அநீதிகளிற்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு மகஜரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உரிமைகளே இல்லாத நாட்டில் எதற்கு மனித உரிமைகள் தினம். வடகிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.குறித்த போராட்டம் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது சங்கம் முன்பாக இடம்பெற்றது.கடந்த 15 வருடங்களாக தமக்கு இழைக்கப்படும் மனித  உரிமை  மீறல்கள் தொடர்பாக போராடிவரும் நிலையில், இதுவரையில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை என தெரிவித்து  சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் கண்டன ஆர்ப்பாட்டாக முன்னெடுத்தனர்.குறித்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.இதன்போது, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், தமக்கு இழைப்பட்ட அநீதிகளிற்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு மகஜரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement