நாட்டில் அமெரிக்க டொலரின் பெறுமதி கடந்த காலங்களை விட பாரிய வீழ்ச்சியை அடைந்தும் பொருட்களின் உள்நாட்டு விலைகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் குற்றம்சுமத்தியுள்ளார்.
இதுதொடர்பில் அவர் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில்,
335 ரூபாவுக்கு டொலர் விற்பனை நடைபெற்ற காலத்தில் இருந்த அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் எந்த மாற்றங்களையும் காண முடியவில்லை.
இதனால் டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வு மக்களுக்கு ஏன் பயன்படவில்லை.
சிறுவர்களின் பால்மா வகைகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உச்சம் தொட்ட விலைகளில் இருந்து கீழ் இறங்கவில்லை.
அண்மையில் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்திருந்தாலும் உணவகங்களில் முட்டை சார்பு உற்பத்திகளில் விலைக்குறைப்பு ஏற்படவில்லை, மாறாக முட்டை விலை அதிகரிக்கப்பட்டால் உணவக உற்பத்தில் அடுத்த மணித்தியாலமே விலைகள் உயர்த்தப்பட்டுவிடும்.
எனவே டொலரின் வீழ்ச்சி சாதாரண மக்களின் வாழ்வாதாரத்திலும், அவர்களின் உணவுச் செலவிலும் பயன்படவில்லையாயின் இதன் இலாபங்கள் யாரைச் சென்றடைகின்றது? ஏன் மக்களுக்கு டொலரின் வீழ்ச்சி பயன்படவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.
டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வு மக்களுக்கு ஏன் பயன்படவில்லை சபா குகதாஸ் கேள்வி நாட்டில் அமெரிக்க டொலரின் பெறுமதி கடந்த காலங்களை விட பாரிய வீழ்ச்சியை அடைந்தும் பொருட்களின் உள்நாட்டு விலைகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் குற்றம்சுமத்தியுள்ளார்.இதுதொடர்பில் அவர் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில்,335 ரூபாவுக்கு டொலர் விற்பனை நடைபெற்ற காலத்தில் இருந்த அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் எந்த மாற்றங்களையும் காண முடியவில்லை.இதனால் டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வு மக்களுக்கு ஏன் பயன்படவில்லை.சிறுவர்களின் பால்மா வகைகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உச்சம் தொட்ட விலைகளில் இருந்து கீழ் இறங்கவில்லை.அண்மையில் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்திருந்தாலும் உணவகங்களில் முட்டை சார்பு உற்பத்திகளில் விலைக்குறைப்பு ஏற்படவில்லை, மாறாக முட்டை விலை அதிகரிக்கப்பட்டால் உணவக உற்பத்தில் அடுத்த மணித்தியாலமே விலைகள் உயர்த்தப்பட்டுவிடும்.எனவே டொலரின் வீழ்ச்சி சாதாரண மக்களின் வாழ்வாதாரத்திலும், அவர்களின் உணவுச் செலவிலும் பயன்படவில்லையாயின் இதன் இலாபங்கள் யாரைச் சென்றடைகின்றது ஏன் மக்களுக்கு டொலரின் வீழ்ச்சி பயன்படவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.