• Oct 19 2026

இலங்கை முழுவதும் திடீரென மின்சாரம் தடைப்பட்டது ஏன்? சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை!

Chithra / Oct 18th 2026, 12:57 pm
image


நாடு முழுவதும் நேற்று சனிக்கிழமை (17) ஏற்பட்ட திடீர் மின்தடை தொடர்பில் முக்கிய நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இந்த மின்தடை எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் முறையான விசாரணைகளை நடத்தவுள்ளதாக தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.


ஆனால், இந்த விசாரணை மின்தடைக்கான காரணத்தைக் கண்டறிவதுடன் மட்டும் நிறைவடையப்போவதில்லை.


எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் ஆராயப்படவுள்ளன.


இதற்கிடையில், விசாரணை தொடர்பான முழுமையான அறிக்கை ஒரு மாதத்திற்குள் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும் உரிய அமைச்சுக்கும் சமர்ப்பிக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் பிரதீப் பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.


அந்த அறிக்கையில், எதிர்கால மின்தடைகளைத் தவிர்ப்பதற்கான முக்கிய பரிந்துரைகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை முழுவதும் திடீரென மின்சாரம் தடைப்பட்டது ஏன் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை நாடு முழுவதும் நேற்று சனிக்கிழமை (17) ஏற்பட்ட திடீர் மின்தடை தொடர்பில் முக்கிய நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்த மின்தடை எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் முறையான விசாரணைகளை நடத்தவுள்ளதாக தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.ஆனால், இந்த விசாரணை மின்தடைக்கான காரணத்தைக் கண்டறிவதுடன் மட்டும் நிறைவடையப்போவதில்லை.எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் ஆராயப்படவுள்ளன.இதற்கிடையில், விசாரணை தொடர்பான முழுமையான அறிக்கை ஒரு மாதத்திற்குள் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும் உரிய அமைச்சுக்கும் சமர்ப்பிக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் பிரதீப் பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.அந்த அறிக்கையில், எதிர்கால மின்தடைகளைத் தவிர்ப்பதற்கான முக்கிய பரிந்துரைகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement