• Apr 17 2026

கணவனைப் பார்க்க உணவுப்பொதிக்குள் போதைப்பொருளுடன் வந்த மனைவி! யாழ். சிறைக்குள் சம்பவம்

Chithra / Oct 7th 2025, 11:28 am
image


யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் உணவு பொதியினுள் கஞ்சா மற்றும் கெரோயினை  மறைத்துவைத்து கொண்டு செல்ல முற்பட்ட இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்

யாழ்ப்பாணம் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்  இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்

சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,

போதைப்பொருள் குற்றச்சாட்டில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கணவருக்கு  உணவு பொதிக்குள் 05 மில்லி கிராம் கெரோயினை கொண்டு செல்ல முற்பட்ட போது கிளிநொச்சி பரந்தன் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய மனைவியான பெண் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்

இதேவேளை,  யாழ் புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த நண்பர் ஒருவரை பார்க்கச் சென்ற போது  அதே பகுதியை சேர்ந்த 25 வயது உடைய ஆண் ஒருவர் 05 மில்லிகிராம் கெரோயின் மற்றும்  சிறிய தொகை கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்

யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணைகளின் பின்னர் இரண்டு சந்தேக நபர்களையும் யாழ்ப்பாணம் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்

யாழ்ப்பாணம் பொலிசார் விசாரணைகளின் பின்னர் இருவரையும் இன்று(07) யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்


கணவனைப் பார்க்க உணவுப்பொதிக்குள் போதைப்பொருளுடன் வந்த மனைவி யாழ். சிறைக்குள் சம்பவம் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் உணவு பொதியினுள் கஞ்சா மற்றும் கெரோயினை  மறைத்துவைத்து கொண்டு செல்ல முற்பட்ட இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்யாழ்ப்பாணம் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்  இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,போதைப்பொருள் குற்றச்சாட்டில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கணவருக்கு  உணவு பொதிக்குள் 05 மில்லி கிராம் கெரோயினை கொண்டு செல்ல முற்பட்ட போது கிளிநொச்சி பரந்தன் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய மனைவியான பெண் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்இதேவேளை,  யாழ் புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த நண்பர் ஒருவரை பார்க்கச் சென்ற போது  அதே பகுதியை சேர்ந்த 25 வயது உடைய ஆண் ஒருவர் 05 மில்லிகிராம் கெரோயின் மற்றும்  சிறிய தொகை கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணைகளின் பின்னர் இரண்டு சந்தேக நபர்களையும் யாழ்ப்பாணம் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்யாழ்ப்பாணம் பொலிசார் விசாரணைகளின் பின்னர் இருவரையும் இன்று(07) யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement