• Jun 17 2024

கணவனுக்கு விசம் வைத்து கொன்ற மனைவி! உதவிய சகோதரன் - தென்னிலங்கையில் கொடூரம்

Chithra / May 26th 2024, 8:36 am
image

Advertisement


பெலியத்த கொஸ்கஹகொட பிரதேசத்தில் கணவனுக்கு விசம் வைத்து கொலை செய்த குற்றச்சாட்டில் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 20ஆம் திகதி இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் உயிரிழந்த நபரின் 45 வயது மனைவியும் அவரது சகோதரனும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று பிள்ளைகளின் தாயான, உயிரிழந்தவரின் மனைவிக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவரது சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது கணவரின் மது கோப்பையில் விஷ இரசாயனத்தை கலந்து கொலை செய்ததாக மனைவி பெலியத்த பொலிஸாலிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவ தினத்தன்று வீட்டில் மது அருந்திய போது ஏற்பட்ட சுகவீனம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

பிரேத பரிசோதனையில் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.  

கணவனுக்கு விசம் வைத்து கொன்ற மனைவி உதவிய சகோதரன் - தென்னிலங்கையில் கொடூரம் பெலியத்த கொஸ்கஹகொட பிரதேசத்தில் கணவனுக்கு விசம் வைத்து கொலை செய்த குற்றச்சாட்டில் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 20ஆம் திகதி இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் உயிரிழந்த நபரின் 45 வயது மனைவியும் அவரது சகோதரனும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.மூன்று பிள்ளைகளின் தாயான, உயிரிழந்தவரின் மனைவிக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவரது சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.தனது கணவரின் மது கோப்பையில் விஷ இரசாயனத்தை கலந்து கொலை செய்ததாக மனைவி பெலியத்த பொலிஸாலிடம் தெரிவித்துள்ளார்.சம்பவ தினத்தன்று வீட்டில் மது அருந்திய போது ஏற்பட்ட சுகவீனம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பிரேத பரிசோதனையில் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.  

Advertisement

Advertisement

Advertisement