• Apr 17 2026

கடையை உடைத்து துவம்சம் செய்த காட்டு யானை; மூதூரில் அதிகாலையில் பதற்றம்

Chithra / Feb 8th 2026, 11:33 am
image

 

திருகோணமலை - மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நீணாக்கேணி கிராமத்திற்குள் இன்று அதிகாலை உட்புகுந்த காட்டு யானையொன்று வீட்டில் நடத்தப்பட்ட பலசரக்குக் கடையை உடைத்து சேதமாக்கியுள்ளது.

இதன்போது கடையும் உபகரணங்களும் சேதமாகியுள்ளதுடன், வீட்டுப் பாதுகாப்பு வேலியும் சேதமாக்கப்பட்டுள்ளது.

மாலை ஆகினால் தமது கிராமத்தில் காட்டு யானைகளின் தொல்லைகள் காணப்படுவதால் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக கிராம மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

காட்டு யானையால் பாதிக்கப்பட்ட தமக்கு அரசாங்கம் நஷ்ட ஈடு தர வேண்டும் எனவும், 

யானை பாதுகாப்பு வேலி அமைத்து தர முன்வர வேண்டும் எனவும் மூதூர் - நீணாக்கேணி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  


கடையை உடைத்து துவம்சம் செய்த காட்டு யானை; மூதூரில் அதிகாலையில் பதற்றம்  திருகோணமலை - மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நீணாக்கேணி கிராமத்திற்குள் இன்று அதிகாலை உட்புகுந்த காட்டு யானையொன்று வீட்டில் நடத்தப்பட்ட பலசரக்குக் கடையை உடைத்து சேதமாக்கியுள்ளது.இதன்போது கடையும் உபகரணங்களும் சேதமாகியுள்ளதுடன், வீட்டுப் பாதுகாப்பு வேலியும் சேதமாக்கப்பட்டுள்ளது.மாலை ஆகினால் தமது கிராமத்தில் காட்டு யானைகளின் தொல்லைகள் காணப்படுவதால் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக கிராம மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.காட்டு யானையால் பாதிக்கப்பட்ட தமக்கு அரசாங்கம் நஷ்ட ஈடு தர வேண்டும் எனவும், யானை பாதுகாப்பு வேலி அமைத்து தர முன்வர வேண்டும் எனவும் மூதூர் - நீணாக்கேணி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Advertisement

Advertisement

Advertisement