• Mar 31 2025

மூதூரில் தென்னை மரங்களை அழித்து, காட்டு யானைகள் அட்டகாசம்!!

Chithra / Dec 10th 2024, 10:29 am
image

  

திருகோணமலை - மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள  இறால்குழி - நாவலடி கிராமத்துக்குள் நேற்றிரவு காட்டு யானைகள் உட்புகுந்து, பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

அங்குள்ள தென்னை மரங்களை துவசம் செய்துள்ளதோடு, குடியிருப்பு வீடென்றையும் சேதப்படுத்தி உள்ளது.

வீட்டை உடைக்கும் போது, அங்கு குடியிருந்தவர்கள் பலத்த போராட்டத்துக்கு மத்தியில் அயலவர்களை உதவிக்கு அழைத்து பாதுகாப்பாக வெளியேற்றியதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்ச்சியாக இந்த கிராமத்தை காட்டு யானை தாக்கி வருவதால், ஒவ்வொரு இரவையும், 

அச்சத்தோடுதான் கழித்து வருவதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 

யுத்தத்துக்கு பின்னர் மீள் குடியேற்றப்பட்ட இந்த நாவலடி கிராமத்தில், சுமார் 100 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும், நிம்மதியாக வாழ்வதற்கு வழி செய்யுமாறும் இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.   


மூதூரில் தென்னை மரங்களை அழித்து, காட்டு யானைகள் அட்டகாசம்   திருகோணமலை - மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள  இறால்குழி - நாவலடி கிராமத்துக்குள் நேற்றிரவு காட்டு யானைகள் உட்புகுந்து, பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.அங்குள்ள தென்னை மரங்களை துவசம் செய்துள்ளதோடு, குடியிருப்பு வீடென்றையும் சேதப்படுத்தி உள்ளது.வீட்டை உடைக்கும் போது, அங்கு குடியிருந்தவர்கள் பலத்த போராட்டத்துக்கு மத்தியில் அயலவர்களை உதவிக்கு அழைத்து பாதுகாப்பாக வெளியேற்றியதாக தெரிவித்துள்ளனர்.தொடர்ச்சியாக இந்த கிராமத்தை காட்டு யானை தாக்கி வருவதால், ஒவ்வொரு இரவையும், அச்சத்தோடுதான் கழித்து வருவதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். யுத்தத்துக்கு பின்னர் மீள் குடியேற்றப்பட்ட இந்த நாவலடி கிராமத்தில், சுமார் 100 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும், நிம்மதியாக வாழ்வதற்கு வழி செய்யுமாறும் இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.   

Advertisement

Advertisement

Advertisement