• Mar 20 2025

மக்களின் குடியிருப்புக்களுக்குள் காட்டு யானைகள் ஊடுறுவல்:பொதுமக்கள் கோரிக்கை..!

Sharmi / Mar 19th 2025, 3:44 pm
image

ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனை, மஜ்மா நகர் போன்ற கிராமங்களில் காட்டு யானைகளின் ஊடுறுவல் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

மாலை வேளைகளில் இப்பிரதேசங்களுக்குள் ஊடுறுவும் காட்டு யானைக் கூட்டம் இப்பிரதேச மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதுடன், மாலை வேளைகளில் கூட மக்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்கு சுதந்திரமாக நடமாட முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதுடன், தொடர்ந்து சொத்தழிவுகளை எதிர்கொண்டு வருகின்றனர். 

பெறுமதியான மரங்கள், வீடுகள், வேலிகள் என்பவற்றை அழித்து நாசமாக்குவதுடன், மனித உயிரிழப்புக்களும் இடம்பெற்றுள்ளன.

நேற்று  இப்பிரதேசத்தில் ஊடுறுவிய காட்டு யானைகளை விரட்டும் பணிகள் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் தலைமையில் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஒத்துழைப்போடு கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசர சேவை, முனை முன்னேற்றக்கழகத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டது.

சுமார் 16 க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக ஊடுறுவ எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டதுடன், காட்டுப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் பணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

இருப்பினும், நிரந்தரத்தீர்வின்றி தொடர்ச்சியாக காட்டு யானைகளின் அச்சுறுத்தல் தொடர்கதையாகவே உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் இணைந்து இதற்கான நிறந்தர தீர்வை பெற்றுத்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


மக்களின் குடியிருப்புக்களுக்குள் காட்டு யானைகள் ஊடுறுவல்:பொதுமக்கள் கோரிக்கை. ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனை, மஜ்மா நகர் போன்ற கிராமங்களில் காட்டு யானைகளின் ஊடுறுவல் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.மாலை வேளைகளில் இப்பிரதேசங்களுக்குள் ஊடுறுவும் காட்டு யானைக் கூட்டம் இப்பிரதேச மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதுடன், மாலை வேளைகளில் கூட மக்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்கு சுதந்திரமாக நடமாட முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதுடன், தொடர்ந்து சொத்தழிவுகளை எதிர்கொண்டு வருகின்றனர். பெறுமதியான மரங்கள், வீடுகள், வேலிகள் என்பவற்றை அழித்து நாசமாக்குவதுடன், மனித உயிரிழப்புக்களும் இடம்பெற்றுள்ளன.நேற்று  இப்பிரதேசத்தில் ஊடுறுவிய காட்டு யானைகளை விரட்டும் பணிகள் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் தலைமையில் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஒத்துழைப்போடு கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசர சேவை, முனை முன்னேற்றக்கழகத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டது.சுமார் 16 க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக ஊடுறுவ எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டதுடன், காட்டுப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் பணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.இருப்பினும், நிரந்தரத்தீர்வின்றி தொடர்ச்சியாக காட்டு யானைகளின் அச்சுறுத்தல் தொடர்கதையாகவே உள்ளது.இது தொடர்பாக மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் இணைந்து இதற்கான நிறந்தர தீர்வை பெற்றுத்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement