• Feb 12 2025

சிலியில் ஏற்பட்ட காட்டு தீ - 60 பேர் கைது

Tharmini / Feb 10th 2025, 10:44 am
image

தென்னமெரிக்க நாடான சிலியின் நுபல், மவுலி மாகாணங்களில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ தீவிரமாக பரவி வருகிறததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இக் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்புப் படையினர் மற்றும் பாதுகாப்பு பிரிவுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றதாகவும், 15க்கும் மேற்பட்ட இடங்களில் தீ வேகமாக பரவியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச் சூழ்நிலையால், நுபல் மற்றும் மவுலி மாகாணங்களில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டு, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த காட்டுத்தீ திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்டு, சந்தேகத்தின்பேரில் 60 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசாங்கத்தினால் தீயணைப்பு நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

சிலியில் ஏற்பட்ட காட்டு தீ - 60 பேர் கைது தென்னமெரிக்க நாடான சிலியின் நுபல், மவுலி மாகாணங்களில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ தீவிரமாக பரவி வருகிறததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இக் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்புப் படையினர் மற்றும் பாதுகாப்பு பிரிவுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றதாகவும், 15க்கும் மேற்பட்ட இடங்களில் தீ வேகமாக பரவியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இச் சூழ்நிலையால், நுபல் மற்றும் மவுலி மாகாணங்களில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டு, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.குறித்த காட்டுத்தீ திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்டு, சந்தேகத்தின்பேரில் 60 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், அரசாங்கத்தினால் தீயணைப்பு நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement