ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தயாரித்திருந்த ஊழல் எதிர்ப்புத் திட்டத்தை முன்னெடுத்துச் சென்று இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாங்கள் ஒத்துழைப்பினை வழங்குவோம் என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
கொழும்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்தார்.
2028ஆம் ஆண்டாகும்போது தனிநபர் வருமானம் 20 ஆயிரம் டொலருக்கு அதிக, வறுமையற்ற, கடனற்ற, அபிவிருத்தி அடைந்த நாட்டை ஏற்படுத்திக்கொள்வதற்காக இலங்கை பாராளுமன்றத்தினால் பிரதான 5 சட்டமூலங்கள் நிறைவேற்றிக்கொள்ளப்பட்டுள்ளன.
ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்த, ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் ஊழல் எதிர்ப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது. அதில் பல செயற்றிட்டங்கள் அடங்கிய உள்ளடக்கங்கள் இணைக்கப்பட்டிருந்தன.
அதன் பிரகாரம், ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆசியாவிலேயே முதல் தடவையாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் தேசிய ஊழல் எதிர்ப்பு திட்டம் ஒன்று இலங்கை அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டது.
நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள நீட்டிக்கப்பட்ட கடன் திட்டத்துக்கு அமைய, எமது செயற்றிட்டங்களை நாணய நிதியம் அடிக்கடி மீளாய்வு செய்து வருகிறது. அதன் பிரகாரம், ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட விடயத்தை நாங்கள் தெரிவித்திருந்தோம்.
எனவே, ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையிலாவது இந்த சட்டமூலங்களை அனுமதித்துக்கொடுக்க நடவடிக்கை எடுத்தமைக்கு நாங்கள் அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தயாரித்திருந்த ஊழல் எதிர்ப்பு திட்டத்தை முன்னெடுத்துச் சென்று இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாங்கள் எமது ஒத்துழைப்பினை வழங்குவோம். அதேவேளை இந்த விடயங்களை விரைவாக மேற்கொள்ளாவிட்டால் 5ஆவது கடன் தவணையை எங்களால் பெற்றுக்கொள்ள முடியாமல் போகும் என்றார்.
ரணிலின் ஊழல் ஒழிப்புத் திட்டத்தை முன்னெடுத்தால் ஒத்துழைப்போம் - பந்துல அறிவிப்பு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தயாரித்திருந்த ஊழல் எதிர்ப்புத் திட்டத்தை முன்னெடுத்துச் சென்று இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாங்கள் ஒத்துழைப்பினை வழங்குவோம் என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். கொழும்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்தார்.2028ஆம் ஆண்டாகும்போது தனிநபர் வருமானம் 20 ஆயிரம் டொலருக்கு அதிக, வறுமையற்ற, கடனற்ற, அபிவிருத்தி அடைந்த நாட்டை ஏற்படுத்திக்கொள்வதற்காக இலங்கை பாராளுமன்றத்தினால் பிரதான 5 சட்டமூலங்கள் நிறைவேற்றிக்கொள்ளப்பட்டுள்ளன.ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்த, ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் ஊழல் எதிர்ப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது. அதில் பல செயற்றிட்டங்கள் அடங்கிய உள்ளடக்கங்கள் இணைக்கப்பட்டிருந்தன.அதன் பிரகாரம், ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆசியாவிலேயே முதல் தடவையாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் தேசிய ஊழல் எதிர்ப்பு திட்டம் ஒன்று இலங்கை அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டது.நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள நீட்டிக்கப்பட்ட கடன் திட்டத்துக்கு அமைய, எமது செயற்றிட்டங்களை நாணய நிதியம் அடிக்கடி மீளாய்வு செய்து வருகிறது. அதன் பிரகாரம், ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட விடயத்தை நாங்கள் தெரிவித்திருந்தோம்.எனவே, ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையிலாவது இந்த சட்டமூலங்களை அனுமதித்துக்கொடுக்க நடவடிக்கை எடுத்தமைக்கு நாங்கள் அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிக்கிறோம்.ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தயாரித்திருந்த ஊழல் எதிர்ப்பு திட்டத்தை முன்னெடுத்துச் சென்று இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாங்கள் எமது ஒத்துழைப்பினை வழங்குவோம். அதேவேளை இந்த விடயங்களை விரைவாக மேற்கொள்ளாவிட்டால் 5ஆவது கடன் தவணையை எங்களால் பெற்றுக்கொள்ள முடியாமல் போகும் என்றார்.