எரிபொருள் விலையில் இன்று (01) எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
விலை திருத்தம் குறித்த முடிவுகள் எதிர்வரும் சில நாட்களில் எட்டப்படும் என அந்த கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விலை அதிகரிப்பிற்குப் பிறகு, சந்தையில் தற்போது நிலவும் விலைகளே தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் ஒரு லீட்டர் ஒட்டோ டீசல் 382 ரூபாய்க்கும், ஒரு லீட்டர் சூப்பர் டீசல் 443 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் 255 ரூபாய்க்கும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் விலை இன்று அதிகரிக்குமா வெளியான முக்கிய அறிவிப்பு எரிபொருள் விலையில் இன்று (01) எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.விலை திருத்தம் குறித்த முடிவுகள் எதிர்வரும் சில நாட்களில் எட்டப்படும் என அந்த கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.கடந்த மார்ச் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விலை அதிகரிப்பிற்குப் பிறகு, சந்தையில் தற்போது நிலவும் விலைகளே தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 92 ஒக்டேன் ரக பெற்றோல் 398 ரூபாய்க்கும், 95 ஒக்டேன் ரக பெற்றோல் 455 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. அதேநேரம் ஒரு லீட்டர் ஒட்டோ டீசல் 382 ரூபாய்க்கும், ஒரு லீட்டர் சூப்பர் டீசல் 443 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் 255 ரூபாய்க்கும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.