தற்போதைய அரசாங்கம் மக்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் வசந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
மக்கள் அரசாங்கத்திற்கு 60 மாதங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது.
அதில் 5 மாதங்கள் மட்டுமே கடந்துவிட்டன. இன்னும் 55 மாதங்கள் மீதமுள்ளது.
டிசம்பர் மாதத்திற்குள் சஜித் ஜனாதிபதியாக வருவார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார்.
அதேவேளை, டிசம்பர் மாதத்தில் சஜித் ஜனாதிபதியானால், ஜனவரி மாதத்தில் தானும் ஜனாதிபதியாக வருவேன் என்று வணக்கத்திற்குரிய பத்தரமுல்ல சீலரதன தேரர் கூறியுள்ளார்.
இந்த அறிக்கைகள் அவர்கள் ஒருபோதும் ஜனாதிபதியாக வரமாட்டார்கள் என்பதைக் குறிப்பதாகவும் அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
டிசம்பர் மாதத்திற்குள் சஜித் ஜனாதிபதியா விளக்கமளித்த அமைச்சர் வசந்த சமரசிங்க. தற்போதைய அரசாங்கம் மக்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் வசந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்தார்.மக்கள் அரசாங்கத்திற்கு 60 மாதங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. அதில் 5 மாதங்கள் மட்டுமே கடந்துவிட்டன. இன்னும் 55 மாதங்கள் மீதமுள்ளது.டிசம்பர் மாதத்திற்குள் சஜித் ஜனாதிபதியாக வருவார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார்.அதேவேளை, டிசம்பர் மாதத்தில் சஜித் ஜனாதிபதியானால், ஜனவரி மாதத்தில் தானும் ஜனாதிபதியாக வருவேன் என்று வணக்கத்திற்குரிய பத்தரமுல்ல சீலரதன தேரர் கூறியுள்ளார்.இந்த அறிக்கைகள் அவர்கள் ஒருபோதும் ஜனாதிபதியாக வரமாட்டார்கள் என்பதைக் குறிப்பதாகவும் அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.