• Mar 26 2025

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா? இலங்கைவந்த இந்திய குழு! விசேட பேச்சுவார்த்தை ஏற்பாடு

Chithra / Mar 25th 2025, 3:22 pm
image


இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் இலங்கை மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு இந்திய மீனவர் குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இதற்கமைய வவுனியாவில் நாளையதினம் இலங்கை இந்திய மீனவர் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த  5 பேர் கொண்ட குழு இன்று செவ்வாய்க்கிழமை (25) விமான மூலமாக  யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை வந்தடைந்தது.

இதில் ஏற்கனவே நாகபட்டினத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் இங்கு இருப்பதால் அவருடன் சேர்ந்து ஆறு பேர் கொண்ட குழு வவுனியாவில் உள்ள தனியார்  விடுதியில்  இருநாட்டு மீனவர்கள் சந்திப்பு நாளை காலை 10 மணி ஆரம்பமாக உள்ளது 

இலங்கை மீனவர்கள் சார்பில் 12 பேர் கொண்ட குழு இந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொள்கின்றனர்.

தமிழக மீனவர்கள் முதல்கட்டமாக ஒரு மாத காலம் இலங்கை கடற்பரப்புக்குள் இழுவை மடி மீன்பிடியை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த முதல் கட்ட மீனவர்களுக்கு இடையேயான மீனவர்களால் இச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

இருநாட்டு மீனவர் பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு எட்டப்படுவது தொடர்பாக  முதல் கட்டமாக  இலங்கை இந்திய மீனவர்களிடையே மீனவர்களின் சொந்த முயற்சியில் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து கடந்த செவ்வாய்கிழமை முடிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா இலங்கைவந்த இந்திய குழு விசேட பேச்சுவார்த்தை ஏற்பாடு இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் இலங்கை மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு இந்திய மீனவர் குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.இதற்கமைய வவுனியாவில் நாளையதினம் இலங்கை இந்திய மீனவர் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த  5 பேர் கொண்ட குழு இன்று செவ்வாய்க்கிழமை (25) விமான மூலமாக  யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை வந்தடைந்தது.இதில் ஏற்கனவே நாகபட்டினத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் இங்கு இருப்பதால் அவருடன் சேர்ந்து ஆறு பேர் கொண்ட குழு வவுனியாவில் உள்ள தனியார்  விடுதியில்  இருநாட்டு மீனவர்கள் சந்திப்பு நாளை காலை 10 மணி ஆரம்பமாக உள்ளது இலங்கை மீனவர்கள் சார்பில் 12 பேர் கொண்ட குழு இந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொள்கின்றனர்.தமிழக மீனவர்கள் முதல்கட்டமாக ஒரு மாத காலம் இலங்கை கடற்பரப்புக்குள் இழுவை மடி மீன்பிடியை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த முதல் கட்ட மீனவர்களுக்கு இடையேயான மீனவர்களால் இச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.இருநாட்டு மீனவர் பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு எட்டப்படுவது தொடர்பாக  முதல் கட்டமாக  இலங்கை இந்திய மீனவர்களிடையே மீனவர்களின் சொந்த முயற்சியில் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து கடந்த செவ்வாய்கிழமை முடிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement