தமிழக சட்டசபையில் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பை இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.
முதன் முறையாக தேர்தலில் தோற்றி யாரும் எதிர்பாராத வெற்றியை பெற்றிருந்தாலும் இன்றைய தினம் சட்டசபையில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக வெற்றிக்கழகம் உள்ளது.
அதன்படி தமிழக வெற்றிக் கழக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான சி. ஜோசப் விஜய் முன்மொழிந்தார்.
இதனைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது ஆதரவு உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர்.
சட்டப்பேரவையில் 232 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். எனவே 116 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தால் பெரும்பான்மை கிடைத்துவிடும். திருச்சி கிழக்கில் விஜய் பதவி விலகியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வென்ற சீனிவாச சேதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மேலும் சட்டப்பேரவைத் தலைவராக ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஜே.சி.டி பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு மூன்று வாக்குகளைத் தவிர்த்து, தவெகவில் 105 வாக்குகள் உள்ளன.
இதனிடையே அதிமுகவில் இருந்து சி.வி. சண்முகம் தலைமையில் பிரிந்த குழுவினர் தவெகவுக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதலில் காங்கிரஸ் கட்சி சார்பில் த.வெ.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்தது.
இதுதொடர்பாக காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவர் ராஜேஷ்குமார் பேசியதாவது, தமிழக வெற்றிக்கழக அரசுக்கு காங்கிரசின் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும், வெறுப்பு அரசியல், மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கும் சக்திகள் தோற்கடிக்கப்பட வேண்டும். பெண்கள் பாதுகாப்பு, 200 யூனிட் இலவச மின்சாரம், மதுபானக்கடைகளை மூடும் உத்தரவுக்கு காங்கிரஸ் வரவேற்கிறது. என்றும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்றார்.
மேலும் மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளும் ஆதரவை தெரிவித்துள்ளன.
தமிழக வெற்றிக்கழக அரசுக்கு சி.பி.எம். கட்சி ஆதரவு அளிப்பதாக சட்டசபையில் சி.பி.எம். சட்டமன்றக்குழு தலைவர் செல்லசுவாமி தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கட்சியை தொடர்ந்து த.வெ.க. அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிப்பதாக சட்டசபையில் விசிக சட்டமன்றக்குழு தலைவர் வன்னிஅரசு தெரிவித்துள்ளார்.
த.வெ.க. அரசுக்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் கட்சி ஆதரவு அளிப்பதாக சட்டசபையில் IUML சட்டமன்றக்குழு தலைவர் ஷாஜகான் அறிவித்தார்.
அந்த வகையில், அ.ம.மு.க.சார்பில் மன்னார்குடியில் நின்று வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. காமராஜ் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவு அளித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய காமராஜ்,"நேற்றே கூறி விட்டேன். நேற்று, இன்று, நாளை என்று ஐந்தாண்டு காலமும் த.வெ.க. அரசுக்கு ஆதரவளிப்பேன்.
திருச்சியில் 300-க்கும் மேற்பட்ட ரவுடிகள் சரண் அடைந்துள்ளனர். முதலமைச்சர் விஜய் ஆட்சி அமைந்த பின்பு கடத்தல்காரர்கள், கஞ்சா விற்றவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை" என்றார்.
இதேவேளை தமிழக வெற்றிக்கழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிப்பதாக சட்டசபையில் CPI சட்டமன்றக்குழு தலைவர் தளி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
மேலும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் இருந்து பா.ம.க. விலகி இருக்க விரும்புகிறது என சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து உறுப்பினர்களின் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
பெரும்பான்மையை நிரூபிக்குமா தவெக மீண்டும் திக்திக் நிமிடங்கள் தமிழக சட்டசபையில் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பை இன்று காலை ஆரம்பமாகியுள்ளது. முதன் முறையாக தேர்தலில் தோற்றி யாரும் எதிர்பாராத வெற்றியை பெற்றிருந்தாலும் இன்றைய தினம் சட்டசபையில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக வெற்றிக்கழகம் உள்ளது.அதன்படி தமிழக வெற்றிக் கழக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான சி. ஜோசப் விஜய் முன்மொழிந்தார்.இதனைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது ஆதரவு உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர். சட்டப்பேரவையில் 232 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். எனவே 116 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தால் பெரும்பான்மை கிடைத்துவிடும். திருச்சி கிழக்கில் விஜய் பதவி விலகியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வென்ற சீனிவாச சேதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.மேலும் சட்டப்பேரவைத் தலைவராக ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஜே.சி.டி பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு மூன்று வாக்குகளைத் தவிர்த்து, தவெகவில் 105 வாக்குகள் உள்ளன. இதனிடையே அதிமுகவில் இருந்து சி.வி. சண்முகம் தலைமையில் பிரிந்த குழுவினர் தவெகவுக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதலில் காங்கிரஸ் கட்சி சார்பில் த.வெ.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்தது. இதுதொடர்பாக காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவர் ராஜேஷ்குமார் பேசியதாவது, தமிழக வெற்றிக்கழக அரசுக்கு காங்கிரசின் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.மேலும், வெறுப்பு அரசியல், மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கும் சக்திகள் தோற்கடிக்கப்பட வேண்டும். பெண்கள் பாதுகாப்பு, 200 யூனிட் இலவச மின்சாரம், மதுபானக்கடைகளை மூடும் உத்தரவுக்கு காங்கிரஸ் வரவேற்கிறது. என்றும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்றார்.மேலும் மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளும் ஆதரவை தெரிவித்துள்ளன.தமிழக வெற்றிக்கழக அரசுக்கு சி.பி.எம். கட்சி ஆதரவு அளிப்பதாக சட்டசபையில் சி.பி.எம். சட்டமன்றக்குழு தலைவர் செல்லசுவாமி தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியை தொடர்ந்து த.வெ.க. அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிப்பதாக சட்டசபையில் விசிக சட்டமன்றக்குழு தலைவர் வன்னிஅரசு தெரிவித்துள்ளார்.த.வெ.க. அரசுக்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் கட்சி ஆதரவு அளிப்பதாக சட்டசபையில் IUML சட்டமன்றக்குழு தலைவர் ஷாஜகான் அறிவித்தார்.அந்த வகையில், அ.ம.மு.க.சார்பில் மன்னார்குடியில் நின்று வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. காமராஜ் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவு அளித்தார்.இதனை தொடர்ந்து பேசிய காமராஜ்,"நேற்றே கூறி விட்டேன். நேற்று, இன்று, நாளை என்று ஐந்தாண்டு காலமும் த.வெ.க. அரசுக்கு ஆதரவளிப்பேன்.திருச்சியில் 300-க்கும் மேற்பட்ட ரவுடிகள் சரண் அடைந்துள்ளனர். முதலமைச்சர் விஜய் ஆட்சி அமைந்த பின்பு கடத்தல்காரர்கள், கஞ்சா விற்றவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை" என்றார்.இதேவேளை தமிழக வெற்றிக்கழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிப்பதாக சட்டசபையில் CPI சட்டமன்றக்குழு தலைவர் தளி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். மேலும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் இருந்து பா.ம.க. விலகி இருக்க விரும்புகிறது என சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து உறுப்பினர்களின் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.