வட் வரி அதிகரிக்கப்படாவிட்டால் 12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை அரசாங்கம் 685 ரூபாவால் குறைத்திருக்கும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
வட் வரி விதிப்பு இல்லாத நிலையில் 12.5 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரை 3,700 ரூபாவிற்கு விற்கும் சாத்தியம் இருந்திருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாங்கள் எங்கள் விலையை அதிகரிக்கவில்லை. இருப்பினும் வட் வரியை அதிகரிக்கும் அரசாங்கத்தின் முடிவு விலை சீர்திருத்தத்தை தூண்டியுள்ளது.
எரிவாயு மீதான வட் விதிப்பு பொருத்தமற்றது மற்றும் சமையல் எரிவாயு மீது முன்பு வட் வரி விதிக்கப்படவில்லை.
சமையல் எரிவாயு மீது வட் வரி விதிக்கும் முடிவானது விலையை அதிகரிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லிட்ரோ எரிவாயு விலை குறையுமா. அரசின் முடிவால் வந்த சிக்கல். அதன் தலைவர் வெளியிட்ட தகவல் வட் வரி அதிகரிக்கப்படாவிட்டால் 12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை அரசாங்கம் 685 ரூபாவால் குறைத்திருக்கும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.வட் வரி விதிப்பு இல்லாத நிலையில் 12.5 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரை 3,700 ரூபாவிற்கு விற்கும் சாத்தியம் இருந்திருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.நாங்கள் எங்கள் விலையை அதிகரிக்கவில்லை. இருப்பினும் வட் வரியை அதிகரிக்கும் அரசாங்கத்தின் முடிவு விலை சீர்திருத்தத்தை தூண்டியுள்ளது.எரிவாயு மீதான வட் விதிப்பு பொருத்தமற்றது மற்றும் சமையல் எரிவாயு மீது முன்பு வட் வரி விதிக்கப்படவில்லை.சமையல் எரிவாயு மீது வட் வரி விதிக்கும் முடிவானது விலையை அதிகரிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.