முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல விவகாரம் நீதிமன்றத்தின் முன்னிலையில் உள்ளதால் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன அவருக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது என கட்சியின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.
தரம்குறைந்த இம்யுனோகுளோபிளின் மருந்தினை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கைதுசெய்யப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தற்போது நீதிமன்ற விவகாரமாக மாறியுள்ளதால் கட்சி எந்த நடவடிக்கையையும் எடுக்கவேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கெஹெலிய ரம்புக்வெல குற்றவாளியா இல்லை என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ள அவர் அது இடம்பெறும்வரை கட்சி எதனையும் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கெஹெலியவிற்கு எதிராக பொதுஜன பெரமுன நடவடிக்கை எடுக்குமா சாகர வெளியிட்ட தகவல் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல விவகாரம் நீதிமன்றத்தின் முன்னிலையில் உள்ளதால் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன அவருக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது என கட்சியின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.தரம்குறைந்த இம்யுனோகுளோபிளின் மருந்தினை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கைதுசெய்யப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இந்த விவகாரம் தற்போது நீதிமன்ற விவகாரமாக மாறியுள்ளதால் கட்சி எந்த நடவடிக்கையையும் எடுக்கவேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.கெஹெலிய ரம்புக்வெல குற்றவாளியா இல்லை என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ள அவர் அது இடம்பெறும்வரை கட்சி எதனையும் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.