எதிர்வரும் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பரீட்சை திணைக்களத்தில் இன்று (13) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட பரீட்சைகள் ஆணையாளர் இதனைத் தெரிவித்தார்.
புலமைப்பரிசில் பரீட்சை காலத்தில் பிள்ளைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.
பரீட்சை நேரத்தில் ஒலிபெருக்கிகளை வைத்து பிள்ளைகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எதிர்வரும் 15ம் திகதி தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள தடையா எதிர்வரும் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.பரீட்சை திணைக்களத்தில் இன்று (13) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட பரீட்சைகள் ஆணையாளர் இதனைத் தெரிவித்தார்.புலமைப்பரிசில் பரீட்சை காலத்தில் பிள்ளைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.பரீட்சை நேரத்தில் ஒலிபெருக்கிகளை வைத்து பிள்ளைகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.