மன்னாரில் அமைக்கப்பட்டு வரும் காற்றாலை தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பு நாளை இடம்பெறவுள்ளதாக வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.
மன்னாரில் அமைக்கப்பட்டு வரும் காற்றாலை மற்றும் இல்மனைட் அகழ்வு தொடர்பான மக்கள் போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பு இடம் பெறவேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பாலும் விடுக்கப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மன்னார் மாவட்ட பொது அமைப்புகளுடன் ஜனாதிபதியுடனான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.
மக்களின் எதிர்ப்பை மீறிய காற்றாலைக் கோபுரம் - ஜனாதிபதியுடன் நாளை சந்திப்பு மன்னாரில் அமைக்கப்பட்டு வரும் காற்றாலை தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பு நாளை இடம்பெறவுள்ளதாக வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.மன்னாரில் அமைக்கப்பட்டு வரும் காற்றாலை மற்றும் இல்மனைட் அகழ்வு தொடர்பான மக்கள் போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பு இடம் பெறவேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பாலும் விடுக்கப்பட்டிருந்தது.இதன் பிரகாரம் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மன்னார் மாவட்ட பொது அமைப்புகளுடன் ஜனாதிபதியுடனான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.