• May 29 2025

காணி சுவீகரிப்பு வர்த்தமானி வாபஸ்:தமிழ் முஸ்லிம் எம்.பிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி..!

Sharmi / May 28th 2025, 12:06 pm
image

தமிழ்,  முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலும் வெளியிலும் ஒற்றுமையுடன் குரல் கொடுத்ததன் விளைவாகவே குறித்த சர்ச்சைக்குரிய நில சுவீகரிப்பு வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வாபஸ் பெற்றிருப்பதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு காணி சம்பந்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பாரதூர தன்மைகள் மற்றும் அதனால் ஏற்படவுள்ள பாதக விளைவுகள் தொடர்பாக தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலும் வெளியிலும் ஒற்றுமையுடன் குரல் கொடுத்ததன் விளைவாகவே குறித்த சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வாபஸ் பெற்றிருக்கிறது. 

இது தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு கிடைத்திருக்கின்ற பாரிய வெற்றியாகும். 

மேலும், இலங்கை வாழ் தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் மக்கள், குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த மக்கள் எதிர்காலத்திலும் தங்களுடைய உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்காக  இவ்வாறு ஒன்றாக செயற்பட வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துகிறது எனவும் தெரிவித்தார்.

காணி சுவீகரிப்பு வர்த்தமானி வாபஸ்:தமிழ் முஸ்லிம் எம்.பிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. தமிழ்,  முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலும் வெளியிலும் ஒற்றுமையுடன் குரல் கொடுத்ததன் விளைவாகவே குறித்த சர்ச்சைக்குரிய நில சுவீகரிப்பு வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வாபஸ் பெற்றிருப்பதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,முல்லைத்தீவு காணி சம்பந்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பாரதூர தன்மைகள் மற்றும் அதனால் ஏற்படவுள்ள பாதக விளைவுகள் தொடர்பாக தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலும் வெளியிலும் ஒற்றுமையுடன் குரல் கொடுத்ததன் விளைவாகவே குறித்த சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வாபஸ் பெற்றிருக்கிறது. இது தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு கிடைத்திருக்கின்ற பாரிய வெற்றியாகும். மேலும், இலங்கை வாழ் தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் மக்கள், குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த மக்கள் எதிர்காலத்திலும் தங்களுடைய உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்காக  இவ்வாறு ஒன்றாக செயற்பட வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துகிறது எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement