• Aug 06 2025

ATM இயந்திரத்தில் பணம் எடுக்க உதவி கேட்ட பெண்: காட்டுடன் ஓடிய நபர் - மடக்கிப்பிடித்த இளைஞர்கள்

Thansita / Aug 5th 2025, 9:42 pm
image

தலவாக்கலையில் ATM கார்ட் கொள்ளையிட முயன்றவர் கைது செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது 

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 

தலவாக்கலை நகரில், வங்கி ATM ஒன்றில் பணம் எடுக்க வந்த பெண்ணின் அட்டையைத் திருட முயன்ற இளைஞர் ஒருவர் பொதுமக்களால் பிடிபட்டு பொலிஸாரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மருத்துவ செலவுக்காக பணம் எடுக்க வந்த பெண், அருகில் இருந்த இளைஞரிடம் தனது ரகசிய எண்ணை சொல்லி உதவி கேட்டுள்ளார். 

அவர் அந்த விவரத்தை தெரிந்தவுடன், ATM அட்டையுடன் தப்பியோட முயன்றுள்ளார்

இதைக் கண்ட அங்கிருந்த இளைஞர்கள் உடனடியாகச் செயல்பட்டு, அவரை மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம்  ஒப்படைத்தனர். 

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://web.facebook.com/share/v/1FpAqSSKSy/

ATM இயந்திரத்தில் பணம் எடுக்க உதவி கேட்ட பெண்: காட்டுடன் ஓடிய நபர் - மடக்கிப்பிடித்த இளைஞர்கள் தலவாக்கலையில் ATM கார்ட் கொள்ளையிட முயன்றவர் கைது செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் தலவாக்கலை நகரில், வங்கி ATM ஒன்றில் பணம் எடுக்க வந்த பெண்ணின் அட்டையைத் திருட முயன்ற இளைஞர் ஒருவர் பொதுமக்களால் பிடிபட்டு பொலிஸாரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளார்.மருத்துவ செலவுக்காக பணம் எடுக்க வந்த பெண், அருகில் இருந்த இளைஞரிடம் தனது ரகசிய எண்ணை சொல்லி உதவி கேட்டுள்ளார். அவர் அந்த விவரத்தை தெரிந்தவுடன், ATM அட்டையுடன் தப்பியோட முயன்றுள்ளார்இதைக் கண்ட அங்கிருந்த இளைஞர்கள் உடனடியாகச் செயல்பட்டு, அவரை மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம்  ஒப்படைத்தனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.⭕https://web.facebook.com/share/v/1FpAqSSKSy/

Advertisement

Advertisement

Advertisement