பெண் பொலிஸார் தங்குமிட விடுதி குளியறையில் குளித்து கொண்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை மறைந்திருந்து படம் பிடித்த ஆண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை நுவரெலியா மாவட்ட நீதவான் பிரபுதிகா நாணயக்கார நேற்று மாலை பிறப்பித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
லிந்துலை பொலிஸ் நிலையத்தில் பெண் பொலிஸார் தங்குமிட விடுதி குளியலறையில் குளித்து கொண்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை அதே பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஆண் பொலிஸ் கான்ஸ்டபிள் தனது ஸ்மார்ட் தொலைபேசியில் படம் பிடித்து வைத்திருந்துள்ளார்.
இந்த விடயம் ஏனைய பொலிஸாருக்கு தெரியவந்ததையடுத்து, விசாரணைகள் தொடரப்பட்டு குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்த லிந்துலை பொலிஸ் அவரை நேற்று நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.
இது தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிபதி பிரபுதிகா நாணயக்கார சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிளை இம்மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.
குளிக்க சென்ற பெண் பொலிஸுக்கு காத்திருந்த அதிர்ச்சி - வீடியோ எடுத்த கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த கதி பெண் பொலிஸார் தங்குமிட விடுதி குளியறையில் குளித்து கொண்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை மறைந்திருந்து படம் பிடித்த ஆண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவை நுவரெலியா மாவட்ட நீதவான் பிரபுதிகா நாணயக்கார நேற்று மாலை பிறப்பித்தார்.இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,லிந்துலை பொலிஸ் நிலையத்தில் பெண் பொலிஸார் தங்குமிட விடுதி குளியலறையில் குளித்து கொண்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை அதே பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஆண் பொலிஸ் கான்ஸ்டபிள் தனது ஸ்மார்ட் தொலைபேசியில் படம் பிடித்து வைத்திருந்துள்ளார்.இந்த விடயம் ஏனைய பொலிஸாருக்கு தெரியவந்ததையடுத்து, விசாரணைகள் தொடரப்பட்டு குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்த லிந்துலை பொலிஸ் அவரை நேற்று நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.இது தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிபதி பிரபுதிகா நாணயக்கார சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிளை இம்மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.