• Apr 30 2026

மாத்தறையில் லொறி மோதி பெண் உயிரிழப்பு!

shanu / Mar 14th 2026, 12:46 pm
image

மாத்தறை - ஹக்மன வீதியின் துடாவ பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.


வீதியோரத்தில் நின்றுகொண்டிருந்த பெண் பாதசாரி மீது, மாத்தறை நோக்கிப் பயணித்த லொறி ஒன்று மோதியதிலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது.


விபத்தில் பலத்த காயமடைந்த மேற்படி பெண், உடனடியாக மாத்தறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்த பெண்ணின் விவரங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.


இவ்விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி மாத்தறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



மாத்தறையில் லொறி மோதி பெண் உயிரிழப்பு மாத்தறை - ஹக்மன வீதியின் துடாவ பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.வீதியோரத்தில் நின்றுகொண்டிருந்த பெண் பாதசாரி மீது, மாத்தறை நோக்கிப் பயணித்த லொறி ஒன்று மோதியதிலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது.விபத்தில் பலத்த காயமடைந்த மேற்படி பெண், உடனடியாக மாத்தறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த பெண்ணின் விவரங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.இவ்விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி மாத்தறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement