• Nov 22 2024

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய பெண் வைத்தியர் மரணம் - கொழும்பு வைத்தியசாலையில் சோகம்

Chithra / Jul 17th 2024, 10:43 am
image


பேருந்து விபத்தில் சிக்கி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் வைத்தியர் ஒருவர் சிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சிலாபம் வைத்தியசாலையின் குறைமாத குழந்தை பிரிவில் பணியாற்றிய 37 வயதான வைத்தியர் செபாலிகா வனமாலி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

கடந்த 4 ஆம் திகதி கொழும்பில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த லொறியுடன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 27 பேர் காயமடைந்து சிலாபம் மற்றும் நீர்கொழும்பு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த வைத்தியர் தனது பிள்ளையை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற போது விபத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

குறித்த வைத்தியர் பேருந்தில் இருந்து சிலாபம் பொது வைத்தியசாலைக்கு வந்து கொண்டிருந்த போது பேருந்து விபத்துக்குள்ளானதில் அவரும் ஏனைய பயணிகளும் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த வைத்தியர், சிகிச்சைக்காக அவர் பணிபுரிந்த சிலாபம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேலும் காயமடைந்தவர்களில் இருந்த அவரது நண்பியை காப்பாற்ற சக மருத்துவர்கள் கடுமையாக போராடினர்.

ஒருவாரம் காலம் சென்ற போதும், அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

வைத்தியரின் உயிரை காப்பாற்றும் வகையில் பல சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அவரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

உயிரிழந்த வைத்தியர் குழந்தைகளுக்காக அர்ப்பணிப்புடன் பணிபுரியும் ஒரு பணிவானர் என்றும்,

ஒவ்வொரு மருத்துவமனையிலும் சக ஊழியர்களுடன் சிறப்பாக பணியாற்றியவர் என்றும் வைத்தியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய பெண் வைத்தியர் மரணம் - கொழும்பு வைத்தியசாலையில் சோகம் பேருந்து விபத்தில் சிக்கி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் வைத்தியர் ஒருவர் சிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.சிலாபம் வைத்தியசாலையின் குறைமாத குழந்தை பிரிவில் பணியாற்றிய 37 வயதான வைத்தியர் செபாலிகா வனமாலி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.கடந்த 4 ஆம் திகதி கொழும்பில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த லொறியுடன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் 27 பேர் காயமடைந்து சிலாபம் மற்றும் நீர்கொழும்பு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.குறித்த வைத்தியர் தனது பிள்ளையை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற போது விபத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.குறித்த வைத்தியர் பேருந்தில் இருந்து சிலாபம் பொது வைத்தியசாலைக்கு வந்து கொண்டிருந்த போது பேருந்து விபத்துக்குள்ளானதில் அவரும் ஏனைய பயணிகளும் படுகாயமடைந்துள்ளனர்.படுகாயமடைந்த வைத்தியர், சிகிச்சைக்காக அவர் பணிபுரிந்த சிலாபம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.மேலும் காயமடைந்தவர்களில் இருந்த அவரது நண்பியை காப்பாற்ற சக மருத்துவர்கள் கடுமையாக போராடினர்.ஒருவாரம் காலம் சென்ற போதும், அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.வைத்தியரின் உயிரை காப்பாற்றும் வகையில் பல சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அவரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.உயிரிழந்த வைத்தியர் குழந்தைகளுக்காக அர்ப்பணிப்புடன் பணிபுரியும் ஒரு பணிவானர் என்றும்,ஒவ்வொரு மருத்துவமனையிலும் சக ஊழியர்களுடன் சிறப்பாக பணியாற்றியவர் என்றும் வைத்தியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement