• Apr 17 2026

புதுக்குடியிருப்பில் வீதியை கடக்க முற்பட்ட பெண்ணை மோதித்தள்ளிய மோட்டார் சைக்கிள்; சம்பவ இடத்திலேயே பலி

Chithra / Feb 25th 2026, 9:19 pm
image

 


முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விசுவமடு, புளியடி பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட குடும்பப் பெண்ணை மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். 


அதிவேகத்தில் வேகட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை கடக்க முற்பட்ட பெண்ணை மோதி தள்ளியதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 


இதேவேளை மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் தர்மபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் 


குறித்த சம்பவத்தின்போது விசுவமடு புளியடி பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான 53 வயதுடைய N.சுகந்தினி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். 


குறித்த சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


புதுக்குடியிருப்பில் வீதியை கடக்க முற்பட்ட பெண்ணை மோதித்தள்ளிய மோட்டார் சைக்கிள்; சம்பவ இடத்திலேயே பலி  முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விசுவமடு, புளியடி பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட குடும்பப் பெண்ணை மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். அதிவேகத்தில் வேகட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை கடக்க முற்பட்ட பெண்ணை மோதி தள்ளியதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதேவேளை மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் தர்மபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் குறித்த சம்பவத்தின்போது விசுவமடு புளியடி பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான 53 வயதுடைய N.சுகந்தினி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement