• Sep 17 2024

அம்பாறையில் நகை திருட்டில் ஈடுபட்ட பெண் கைது- தொடர் விசாரணையில் பொலிஸார்..!

Sharmi / Aug 12th 2024, 4:03 pm
image

Advertisement

பிரபல நகைக்கடை ஒன்றில்  நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விளினியடி பௌசியா மாவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை ஒன்றில்  கடந்த புதன்கிழமை (7)  நகை திருடப்பட்டிருந்தது.

நகை திருடப்பட்டமை தொடர்பில் நகைக்கடை உரிமையாளர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கடந்த புதன்கிழமை (7)  முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டிற்கமைய   சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தின்  வழிகாட்டுதலுக்கமைய  பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸ்  குழுவினர்  விசாரணைகளை துரிதமாக மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது   சம்மாந்துறை பெருங்குற்றப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் அம்பாறை பிரதேசத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில்   நேற்றையதினம் (11) குறித்த  திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரான  அம்பாறை ஹிங்குரான பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பெண்ணை   திருடப்பட்ட நகைகளுடன் கைது செய்தனர்.

மேலும் குறித்த சந்தேக நபர்  தொடர்பான மேலதிக தகவல்கள் தெரிந்தால் 0672 260 222 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு  சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கும்படி பொலிசார் பொதுமக்களின் கேட்டுள்ளனர்.





அம்பாறையில் நகை திருட்டில் ஈடுபட்ட பெண் கைது- தொடர் விசாரணையில் பொலிஸார். பிரபல நகைக்கடை ஒன்றில்  நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விளினியடி பௌசியா மாவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை ஒன்றில்  கடந்த புதன்கிழமை (7)  நகை திருடப்பட்டிருந்தது.நகை திருடப்பட்டமை தொடர்பில் நகைக்கடை உரிமையாளர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கடந்த புதன்கிழமை (7)  முறைப்பாடு செய்திருந்தார்.குறித்த முறைப்பாட்டிற்கமைய   சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தின்  வழிகாட்டுதலுக்கமைய  பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸ்  குழுவினர்  விசாரணைகளை துரிதமாக மேற்கொண்டிருந்தனர்.இதன் போது   சம்மாந்துறை பெருங்குற்றப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் அம்பாறை பிரதேசத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில்   நேற்றையதினம் (11) குறித்த  திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரான  அம்பாறை ஹிங்குரான பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பெண்ணை   திருடப்பட்ட நகைகளுடன் கைது செய்தனர்.மேலும் குறித்த சந்தேக நபர்  தொடர்பான மேலதிக தகவல்கள் தெரிந்தால் 0672 260 222 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு  சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கும்படி பொலிசார் பொதுமக்களின் கேட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement