தங்காலை மாத்தறை பிரதான வீதியின் தலல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்தார்.
அதாவது முச்சக்கர வண்டியும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் கொட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்தின் போது முச்சக்கரவண்டியில் ஐந்து பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் விபத்தில் காயமடைந்த 33 வயதான முச்சக்கரவண்டி சாரதி, 15 வயது சிறுவன், 14 வயது சிறுமி மற்றும் 11 மாத குழந்தை ஆகியோர் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை விபத்தில் காயமடைந்த குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாத்தறை பிரதான வீதியில் விபத்து - பெண் பலி -உயிருக்கு போராடும் 11 மாத குழந்தை. தங்காலை மாத்தறை பிரதான வீதியின் தலல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்தார்.அதாவது முச்சக்கர வண்டியும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.குறித்த விபத்தில் கொட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.விபத்தின் போது முச்சக்கரவண்டியில் ஐந்து பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் விபத்தில் காயமடைந்த 33 வயதான முச்சக்கரவண்டி சாரதி, 15 வயது சிறுவன், 14 வயது சிறுமி மற்றும் 11 மாத குழந்தை ஆகியோர் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை விபத்தில் காயமடைந்த குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.