• Mar 18 2025

பெண்ணொருவர் கழுத்தறுத்து தீ வைத்து கொலை - இலங்கையில் பயங்கரம்

Chithra / Feb 6th 2025, 8:39 am
image

 

ராகம, தலகொல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (05) மாலை பெண்ணொருவர் கழுத்தறுத்து தீ வைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தலகொல்ல, ராகம பகுதியைச் சேர்ந்த 76 வயதான பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண் தனது கணவருடன் வீட்டில் வசித்து வந்ததாகவும், 

சம்பவம் நடந்த நேரத்தில் கணவர் வேலைக்குச் சென்றிருந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கணவர் வீடு திரும்பி மனைவியைச் தேடிய போது, ​​அவர் இவ்வாறு கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பெண்ணொருவர் கழுத்தறுத்து தீ வைத்து கொலை - இலங்கையில் பயங்கரம்  ராகம, தலகொல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (05) மாலை பெண்ணொருவர் கழுத்தறுத்து தீ வைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.தலகொல்ல, ராகம பகுதியைச் சேர்ந்த 76 வயதான பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார்.கொலை செய்யப்பட்ட பெண் தனது கணவருடன் வீட்டில் வசித்து வந்ததாகவும், சம்பவம் நடந்த நேரத்தில் கணவர் வேலைக்குச் சென்றிருந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.கணவர் வீடு திரும்பி மனைவியைச் தேடிய போது, ​​அவர் இவ்வாறு கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்தக் கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement