• Apr 02 2025

மோட்டார் சைக்கிளில் மதுபானம் கொண்டு சென்ற பெண்கள் பொலிஸை தாக்கிவிட்டு தப்பியோட்டம்

Chithra / Mar 31st 2025, 1:27 pm
image

 

மோட்டார் சைக்கிளில் மதுபானம் கொண்டு சென்ற பெண்கள் இருவர் சோதனையிடச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம்  கந்தகெட்டிய பகுதியில் பதிவாகியுள்ளது. 

இந்த தாக்குதல் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. 

குறித்த பெண்கள் சட்டவிரோதமான முறையில் மோட்டார் சைக்கிளில் மதுபானம் கொண்டு செல்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கந்தகெட்டிய பகுதியில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 

இதன்போது சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சமிக்ஞை செய்யப்பட்டபோது,

சந்தேகநபர்கள் பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

இச்சம்பவத்தில் காயமடைந்த கான்ஸ்டபிள் கந்தகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 

அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளில் மதுபானம் கொண்டு சென்ற பெண்கள் பொலிஸை தாக்கிவிட்டு தப்பியோட்டம்  மோட்டார் சைக்கிளில் மதுபானம் கொண்டு சென்ற பெண்கள் இருவர் சோதனையிடச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம்  கந்தகெட்டிய பகுதியில் பதிவாகியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த பெண்கள் சட்டவிரோதமான முறையில் மோட்டார் சைக்கிளில் மதுபானம் கொண்டு செல்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கந்தகெட்டிய பகுதியில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சமிக்ஞை செய்யப்பட்டபோது,சந்தேகநபர்கள் பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தில் காயமடைந்த கான்ஸ்டபிள் கந்தகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement