• Apr 02 2025

சி.ஐ.டி.யில் ஆஜரான முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர்!

CID
Chithra / Mar 31st 2025, 1:28 pm
image

 

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்  இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CID) முன்னிலையாகியுள்ளார்.

2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது கொழும்பு குற்றப்பிரிவில் பணியாற்றிய ஒரு  பொலிஸ்  உத்தியோகத்தர் இறந்தமை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று  முன்னியலையாகினார்.

இந்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய முன்னாள் அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக நேற்று (30) குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

வழக்கு தொடர்பான விபரங்கள் முன்னாள் அமைச்சருக்குத் தெரிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் காரணமாக இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக அந்த அதிகாரி மேலும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னகோன்  உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சி.ஐ.டி.யில் ஆஜரான முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர்  முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்  இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CID) முன்னிலையாகியுள்ளார்.2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது கொழும்பு குற்றப்பிரிவில் பணியாற்றிய ஒரு  பொலிஸ்  உத்தியோகத்தர் இறந்தமை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று  முன்னியலையாகினார்.இந்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய முன்னாள் அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக நேற்று (30) குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.வழக்கு தொடர்பான விபரங்கள் முன்னாள் அமைச்சருக்குத் தெரிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் காரணமாக இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக அந்த அதிகாரி மேலும் சுட்டிக்காட்டினார்.இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னகோன்  உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement