• Apr 02 2025

தந்தைசெல்வா நினைவிடத்தில் ரவிகரன் எம்.பி அஞ்சலி

Chithra / Mar 31st 2025, 1:42 pm
image


தந்தை செல்வா என அறியப்படும், இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகத்தின் 127ஆவது ஜனனதினம் இன்று பல்வேறு இடங்களிலும் நினைவுகூரப்படுகின்றது. 

இந் நிலையில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருமான துரைராசா ரவிகரன், தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வாவுக்கு  யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலிகளை மேற்கொண்டார். 

குறித்த அஞ்சலியில்  இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட பிரதிநிதிகள் சிலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


தந்தைசெல்வா நினைவிடத்தில் ரவிகரன் எம்.பி அஞ்சலி தந்தை செல்வா என அறியப்படும், இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகத்தின் 127ஆவது ஜனனதினம் இன்று பல்வேறு இடங்களிலும் நினைவுகூரப்படுகின்றது. இந் நிலையில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருமான துரைராசா ரவிகரன், தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வாவுக்கு  யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலிகளை மேற்கொண்டார். குறித்த அஞ்சலியில்  இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட பிரதிநிதிகள் சிலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement