• Apr 02 2025

பாதாள உலகக்கும்பலைச் சேர்ந்த ரொடும்ப அமில ரஷ்யாவில் கைது

Chithra / Mar 31st 2025, 2:19 pm
image

 

தென்னிலங்கையின் முக்கிய பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்களில் ஒருவரான ரொடும்ப அமில ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு மாத்தறை ரொடும்ப பிரதேசத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தமை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவருக்கு எதிராக நிலுவையில் உள்ளன.

குறித்த வழக்குகளில் இருந்து நீதிமன்றத்தின் ஊடாக பிணையில் வெளிவந்த ரொடும்ப அமில எனப்படும் ரத்நாயக்க அமில சம்பத், ஒரு கட்டத்தில் நாட்டை விட்டும் ரகசியமாக தப்பிச் சென்றிருந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம்(30) அவர் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ரஷ்ய அதிகாரிகள் அதுகுறித்து இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

பாதாள உலகக்கும்பலைச் சேர்ந்த ரொடும்ப அமில ரஷ்யாவில் கைது  தென்னிலங்கையின் முக்கிய பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்களில் ஒருவரான ரொடும்ப அமில ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 2019ஆம் ஆண்டு மாத்தறை ரொடும்ப பிரதேசத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தமை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவருக்கு எதிராக நிலுவையில் உள்ளன.குறித்த வழக்குகளில் இருந்து நீதிமன்றத்தின் ஊடாக பிணையில் வெளிவந்த ரொடும்ப அமில எனப்படும் ரத்நாயக்க அமில சம்பத், ஒரு கட்டத்தில் நாட்டை விட்டும் ரகசியமாக தப்பிச் சென்றிருந்தார்.இந்நிலையில் நேற்றைய தினம்(30) அவர் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.ரஷ்ய அதிகாரிகள் அதுகுறித்து இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement