மாத்தறை - தெனியாய பஸ் தரிப்பிடத்தில் நின்றுகொண்டிருந்த பயணி ஒருவரிடமிருந்து பணத்தை திருடியதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெனியாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெனியாய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர் தெனியாய பஸ் தரிப்பிடத்தில் இரவுநேர சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது பஸ் தரிப்பிடத்தில் நின்றுகொண்டிருந்த பயணி ஒருவரை சோதனையிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
பின்னர் இந்த பயணி தனது பையிலிருந்த பணத்தை எடுக்க முயன்றபோது 21,540 ரூபா பணம் காணாமல்போயிருப்பதை அறிந்துகொண்டுள்ளார்.
இதனையடுத்து இந்த பயணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தெனியாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பஸ் தரிப்பிடத்தில் நின்ற பயணியிடம் திருட்டு; சிக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் மாத்தறை - தெனியாய பஸ் தரிப்பிடத்தில் நின்றுகொண்டிருந்த பயணி ஒருவரிடமிருந்து பணத்தை திருடியதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெனியாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.தெனியாய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர் தெனியாய பஸ் தரிப்பிடத்தில் இரவுநேர சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது பஸ் தரிப்பிடத்தில் நின்றுகொண்டிருந்த பயணி ஒருவரை சோதனையிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.பின்னர் இந்த பயணி தனது பையிலிருந்த பணத்தை எடுக்க முயன்றபோது 21,540 ரூபா பணம் காணாமல்போயிருப்பதை அறிந்துகொண்டுள்ளார்.இதனையடுத்து இந்த பயணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தெனியாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.