• Nov 25 2024

பாதிக்கப்பட்ட பெண்களின் நீதிக்கான குரலாக மகளிர் தினம் வலுப் பெற வேண்டும் - சபா குகதாஸ் தெரிவிப்பு..!!

Tamil nila / Mar 7th 2024, 9:56 pm
image

மார்ச் 8 உலக மகளிர் தினத்தில் மகளிர் தின வாழ்த்து கூறும் சம நேரம் தமிழர் தாயகத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பதற்கான குரல் ஓங்கி ஒலிக்க வேண்டிய தினமாக மகளிர் தினம் அமைய வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

யுத்தம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொண்ணூறாயிரம்  பெண்களை விதவைகள் ஆக்கி பெண் தலைமைத்துவ குடும்பங்களாக மாற்றியுள்ளது இவர்களது வாழ்வாதாரப் போராட்டம் முடிவில்லாப் பிரச்சினையாக தொடர்கின்றது.

நாட்டில் ஆட்சியாளர்களின் ஊழல் மற்றும் பொருளாதார பின்னடைவு காரணமாக குடும்பப் பெண்கள் பாரிய இன்னல்களை எதிர் நோக்குகின்றனர்.

அத்துடன் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் குற்றங்கள் போன்றவற்றுக்கு நியாயமான நீதி இன்றி பாதிக்கப்படுகின்றனர். 

 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களான தாய்மார்கள் மற்றும் மனைவிமார் கண்ணீருடன்  வீதி வீதியாக அலைந்து பலர் நடைப்பிணங்களாக மாறியுள்ளனர் இவர்கள் எதிர் பார்க்கும் பொறுப்புக் கூறல் மற்றும் நீதி கால இழுத்தடிப்பின் மூலம் நீர்த்துப் போகச் செய்யப்படுகிறது ஆகவே தமிழர் தாயகத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் நீதிக்கான குரலாக மகளிர் தினம் வலுப் பெற  வேண்டும்- என்றார். 

பாதிக்கப்பட்ட பெண்களின் நீதிக்கான குரலாக மகளிர் தினம் வலுப் பெற வேண்டும் - சபா குகதாஸ் தெரிவிப்பு. மார்ச் 8 உலக மகளிர் தினத்தில் மகளிர் தின வாழ்த்து கூறும் சம நேரம் தமிழர் தாயகத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பதற்கான குரல் ஓங்கி ஒலிக்க வேண்டிய தினமாக மகளிர் தினம் அமைய வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.யுத்தம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொண்ணூறாயிரம்  பெண்களை விதவைகள் ஆக்கி பெண் தலைமைத்துவ குடும்பங்களாக மாற்றியுள்ளது இவர்களது வாழ்வாதாரப் போராட்டம் முடிவில்லாப் பிரச்சினையாக தொடர்கின்றது.நாட்டில் ஆட்சியாளர்களின் ஊழல் மற்றும் பொருளாதார பின்னடைவு காரணமாக குடும்பப் பெண்கள் பாரிய இன்னல்களை எதிர் நோக்குகின்றனர்.அத்துடன் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் குற்றங்கள் போன்றவற்றுக்கு நியாயமான நீதி இன்றி பாதிக்கப்படுகின்றனர்.  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களான தாய்மார்கள் மற்றும் மனைவிமார் கண்ணீருடன்  வீதி வீதியாக அலைந்து பலர் நடைப்பிணங்களாக மாறியுள்ளனர் இவர்கள் எதிர் பார்க்கும் பொறுப்புக் கூறல் மற்றும் நீதி கால இழுத்தடிப்பின் மூலம் நீர்த்துப் போகச் செய்யப்படுகிறது ஆகவே தமிழர் தாயகத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் நீதிக்கான குரலாக மகளிர் தினம் வலுப் பெற  வேண்டும்- என்றார். 

Advertisement

Advertisement

Advertisement