யாழ்ப்பாணத்தில் கடந்த பல நாட்களாக விட்டுவிட்டு மின்தடை ஏற்பட்டதன் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
குறிப்பாக உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் இதனால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.
மின் இணைப்புகளில் தூசி படிந்திருந்தமையே இந்த மின்தடைக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மின் இணைப்புகளில் படிந்துள்ள தூசியை அகற்றி, மின்தடை ஏற்படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை இலங்கை மின்சார சபையினர் யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நேற்றைய தினம் வலிகாமம் மேற்கு பகுதியிலும் மின் இணைப்புகளை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மின் இணைப்புகளில் படிந்துள்ள தூசிகளை முறையாக அகற்றுவதன் மூலம் மின்தடை ஏற்படுவதைக் குறைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் மின் தடையை சீர் செய்வதற்கான பணிகள் முன்னெடுப்பு யாழ்ப்பாணத்தில் கடந்த பல நாட்களாக விட்டுவிட்டு மின்தடை ஏற்பட்டதன் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். குறிப்பாக உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் இதனால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.மின் இணைப்புகளில் தூசி படிந்திருந்தமையே இந்த மின்தடைக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, மின் இணைப்புகளில் படிந்துள்ள தூசியை அகற்றி, மின்தடை ஏற்படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை இலங்கை மின்சார சபையினர் யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக நேற்றைய தினம் வலிகாமம் மேற்கு பகுதியிலும் மின் இணைப்புகளை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.மின் இணைப்புகளில் படிந்துள்ள தூசிகளை முறையாக அகற்றுவதன் மூலம் மின்தடை ஏற்படுவதைக் குறைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.