• Nov 16 2024

சிவனடி பாத மலையில் புதிய மின் மாற்றிகள் பொருத்தும் பணி ஆரம்பம்..!! samugammedia

Tamil nila / Dec 24th 2023, 12:45 pm
image

சக்தி வாய்ந்த மின் மாற்றிகள் பொருத்தும் பணியில் மின் வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


 தற்போது  மின்சாரம் சிவனடிபாத மலைக்கு வழங்கும் மின் இணைப்பு அம்பலம் பகுதியில் நிறுவப்பட்டுள்ள 25 KVA மின் மாற்றிக்கு பதிலாக இரண்டு 160 KVA மின்மாற்றிகள் பொருத்த படவுள்ளதாக மத்திய மாகாண மின் நிர்மாணப் பொறியியலாளர் தெரிவித்துள்ளார். ஊசி மலை பகுதியில் நிறுவப்பட்டுள்ள இரண்டு KDA 25 மின் மாற்றிகளில் உள்ளது என மின் சார சபையின் பொறியாளர் தம்மிக்க பண்டார தெரிவித்தார்.


 இந்த புதிய அதி சக்தி வாய்ந்த மின்மாற்றி அமைப்பின் ஊடாக 50 வருடங்களுக்கும் மேலாக தொடர்ச்சியான மற்றும் தரமான மின்சாரத்தை வழங்கும் திறனை சிவனடி பாத மலைக்கு பெற்று கொடுத்து உள்ளதாக நிர்மாண பொறியியலாளர் திரு.தம்மிக்க பண்டார மேலும் தெரிவித்தார்.

 "தர்ம சுகந்தய மனுசத் அறக்கட்டளை"யின் திரு.பியதிஸ்ஸ விக்கிரமரத்ன உள்ளிட்ட குழுவினர் தற்போது பணிய நீர் குழாய் அமைப்பில் குழாய்களை பதித்து, மின்சார நீரேற்று நிலையங்களை அமைத்து நீர் விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


 இந்த ஆண்டு (2023/2024)  சிவனடி பாத மலை பருவகாலம் உந்துவப் புன் பௌர்ணமி நாளில் (26) முதல் தொடங்குகிறது.  

யாத்திரை காலம் தொடங்கும் முன், பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில், தர்ம சுகந்தயா மனுசத் அறக்கட்டளை இந்த நல்ல பணிகளை மேற்கொண்டு வருகிறது.



 நல்லதண்ணியா - சிவனடி பாத மலை வீதியின் இந்த அபிவிருத்திப் பணிகளுக்கு மஸ்கெலியா மின்சார சபையின் வாடிக்கையாளர் சேவை நிலையத்தின் மின்சார அத்தியட்சகர் திரு.தனுக விமலவீர மற்றும் ஊழியர்களும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.

 MI 17 ஹெலிகாப்டர் மூலம் நல்ல தண்ணியில் இருந்து ஊசி மலை மற்றும் ரத்து அம்பலமவிற்கு புதிய மின் மாற்றிகள் இரண்டும்    2 இடங்களில் மின் மாற்றிகளை நிறுவும் பணியில் மின் சார சபையின் பொறியாளர் மற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சிவனடி பாத மலையில் புதிய மின் மாற்றிகள் பொருத்தும் பணி ஆரம்பம். samugammedia சக்தி வாய்ந்த மின் மாற்றிகள் பொருத்தும் பணியில் மின் வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது  மின்சாரம் சிவனடிபாத மலைக்கு வழங்கும் மின் இணைப்பு அம்பலம் பகுதியில் நிறுவப்பட்டுள்ள 25 KVA மின் மாற்றிக்கு பதிலாக இரண்டு 160 KVA மின்மாற்றிகள் பொருத்த படவுள்ளதாக மத்திய மாகாண மின் நிர்மாணப் பொறியியலாளர் தெரிவித்துள்ளார். ஊசி மலை பகுதியில் நிறுவப்பட்டுள்ள இரண்டு KDA 25 மின் மாற்றிகளில் உள்ளது என மின் சார சபையின் பொறியாளர் தம்மிக்க பண்டார தெரிவித்தார். இந்த புதிய அதி சக்தி வாய்ந்த மின்மாற்றி அமைப்பின் ஊடாக 50 வருடங்களுக்கும் மேலாக தொடர்ச்சியான மற்றும் தரமான மின்சாரத்தை வழங்கும் திறனை சிவனடி பாத மலைக்கு பெற்று கொடுத்து உள்ளதாக நிர்மாண பொறியியலாளர் திரு.தம்மிக்க பண்டார மேலும் தெரிவித்தார். "தர்ம சுகந்தய மனுசத் அறக்கட்டளை"யின் திரு.பியதிஸ்ஸ விக்கிரமரத்ன உள்ளிட்ட குழுவினர் தற்போது பணிய நீர் குழாய் அமைப்பில் குழாய்களை பதித்து, மின்சார நீரேற்று நிலையங்களை அமைத்து நீர் விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு (2023/2024)  சிவனடி பாத மலை பருவகாலம் உந்துவப் புன் பௌர்ணமி நாளில் (26) முதல் தொடங்குகிறது.  யாத்திரை காலம் தொடங்கும் முன், பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில், தர்ம சுகந்தயா மனுசத் அறக்கட்டளை இந்த நல்ல பணிகளை மேற்கொண்டு வருகிறது. நல்லதண்ணியா - சிவனடி பாத மலை வீதியின் இந்த அபிவிருத்திப் பணிகளுக்கு மஸ்கெலியா மின்சார சபையின் வாடிக்கையாளர் சேவை நிலையத்தின் மின்சார அத்தியட்சகர் திரு.தனுக விமலவீர மற்றும் ஊழியர்களும் ஆதரவு வழங்கி வருகின்றனர். MI 17 ஹெலிகாப்டர் மூலம் நல்ல தண்ணியில் இருந்து ஊசி மலை மற்றும் ரத்து அம்பலமவிற்கு புதிய மின் மாற்றிகள் இரண்டும்    2 இடங்களில் மின் மாற்றிகளை நிறுவும் பணியில் மின் சார சபையின் பொறியாளர் மற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement